×
 

உள்ளாட்சித் தேர்தலிலும் நம்ம தான்..! தவெகவில் உரிய மரியாதை கிடைக்கும்..! அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!

தமிழக வெற்றி கழகத்தில் உரிய மரியாதை மற்றும் பதவி கிடைக்கும் என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆனந்த் உரையாற்றினார். அப்போது, தமிழக வெற்றி கழகத்தில் அனைத்து நிர்வாகிகளுக்கும் உரிய மரியாதை மற்றும் பதவி கிடைக்கும் என்று கூறினார். மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தினால் உடனடியாக சரி செய்து கொடுப்போம் என்று கூறினார்.

அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்திற்கு வந்த பிறகு அவருக்கு உரிய இடம் தரப்பட்டது என்றார். தான் நினைத்த அனைத்தையும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிவிட்டார் என்றும் கூறியுள்ளார். புதிதாக கட்சியில் சேர்ப்பவர்களை நினைத்து தமிழக வெற்றி கழகத்தினர் தயங்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். எந்த விதமான நெருடலும் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

மாற்றுக் கட்சியிலிருந்து வருபவர்களுக்கு உரிய பதவிகள் முதலமைச்சர் விஜயிடம் பேசி முடிவெடுத்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். கூடிய விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது என்றும் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் தான் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால் நமது தலைவர், முதல்வர் விஜய் தனி ஆளாக நின்று மக்களை நம்பி வருகிறேன் என்று சொல்லி இன்று முதலமைச்சர் ஆக இருக்கிறார் என்றும் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கை தான் வாக்காக செலுத்தப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகையாகவே இருந்தாலும் சரி... பகிரங்கமாக அறிவித்த தவெக அமைச்சர்... பரபரக்கும் அரசியல் களம்...!

பலர் பல கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார்கள் என்றும் ஆனால் தங்கள் வேட்பாளர்கள் குறைந்த அளவில் செலவு செய்து இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் முதல்வர் விஜயின் முகத்தை மட்டும் காட்டி தாங்கள் ஜெயித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் நாங்கள் லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஊழல் செய்ய மாட்டோம் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்வதாக கூறினார். 

இதையும் படிங்க: திமுகவின் பண்ணையார் mindset-தான் தோல்விக்கு காரணம்..! அமைச்சர் ஆதவ் கடும் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share