×
 

“எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கிறோம்...” - மாணவர்களுக்கு தெம்பூட்டிய அன்பில் மகேஷ்...!

வேதாரண்யம் அருகே மேல்நிலைப்பள்ளி பவள விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி ஊராட்சியில் உள்ள இரா.நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு பவள விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி   கலந்துகொண்டார்.  உடன் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்,  தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோரும்  பங்கேற்றனர்.

 இந்த விழாவில் தமிழக  பள்ளி கல்வித்துறை அமைச்சர் வாழ்த்துரை வழங்கிய போது 
தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்த பள்ளிக்கூட வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை இப்பகுதி மக்கள் தங்களால் முடிந்த அளவிற்கான பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்கின்ற தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டங்களான காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான்முதல்வன், இல்லம் தேடிக்கல்வி போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

குழந்தைகளை பள்ளியில் படிக்கும் வயதில் மறக்காமல் உடனடியாக அவர்களை பள்ளிக்கூடத்தில் நீங்கள் சேர்த்து விடுங்கள் பள்ளிக்கூடத்தில் சேர்க்கின்ற பணியை மட்டும் நீங்கள் செய்தால் போதும் மற்றபடி அந்த பிள்ளைகளுக்கு தேவையான கல்வி, அடிப்படை வசதிகள் மற்றும் தொடர்ந்து படித்து கல்லூரி படித்து முடித்ததற்கு பிறகு நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக அந்த பிள்ளைகளுடைய திறன்களை மேம்படுத்தி அதன் பிறகு அந்த பிள்ளைகளுக்கான ஒரு நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி 
கொள்வார்கள் என்றார்.

இதையும் படிங்க: ரூ.600 கோடியைக் காட்டி தமிழக அரசை பிளாக் மெயில் செய்யும் மத்திய அரசு... பகீர் தகவலை பகிர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!

எந்த ஒரு கெட்ட பழக்கத்திற்கும் அடிமையாகாமல் நீங்கள் ஒவ்வொருவரும் படிப்பில் கவனம் செலுத்துங்கள் படிப்புக்கு தடையாக எது வந்தாலும் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று முதல்வர் கூறியுள்ளார். நீங்கள் உயர்ந்த இடத்திற்கு வரும்போது இந்த ஸ்கூலில் 2025 இல் இங்கு படிக்கும் மாணவன் ஒருவர் என்னும் 25 ஆண்டு கழித்து ஆளுமை மிக்க ஒருவராக நிற்கும் போது அந்த பையனை பார்ப்பதற்காக கால் கடுக்க ஒரு மணி நேரம் காத்திருப்பேன் என்று கூறினார்.

அந்த அளவுக்கு நீங்கள் உயர்ந்து வர வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து, இரா.நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவளவிழா மலரை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர்  பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில்   இரா.நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளி 75 ஆம் ஆண்டு பவளவிழா மலரை மாவட்ட பொறுப்பு அமைச்சர்  பள்ளி கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்டார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படுகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share