×
 

அடிதூள்... தமிழகம் முழுவதும் 500 வெற்றி பள்ளிகள்... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு...!

தமிழகம் முழுவதும் வெற்றி பள்ளிகள் என்ற திட்டத்தில் 500 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று தூத்துக்குடி மாநில அளவிலான அடைவு தேர்வு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கே இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது தேசிய கல்விக் கொள்கை ஏற்றால் தான் நிதி தருவோம் என்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இரு மொழி கொள்கை என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. 2,150 கோடி கடந்தாண்டு மத்திய அரசு தரவில்லை. கல்வித்துறை ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான 1200 கோடி ரூபாய் மத்திய அரசு விடுவிக்கவில்லை இரண்டு பேரும் தொடர்ந்து மத்திய அரசிடம் கல்வி நிதி கேட்டு வருகிறோம்.

ஒரு லட்சம் மேற்பட்ட ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி பயில்வதற்காக ஆர்.டி.ஐ திட்டத்திற்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறினார். இந்த நிதியை வழங்கினால் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் கல்வித் துறை உள்ள பல திட்டங்கள் பாதிக்க கூடாது என்ற விதத்தில் தமிழக அரசு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: சர்ச்சையான தவெக மதுரை மாநாடு.. தலைவர் விஜய் மீது போலீசில் பரபரப்பு புகார்..!!

மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதால் அங்கு பயலக் கூடிய மாணவர்கள் சிறந்த உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் வெற்றி பள்ளிகள் என்ற மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாளை 10 வார்டுகள்.. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் எங்கெங்கு நடக்கிறது தெரியுமா..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share