சமக்ரா சிக்ஷா திட்டத்தில் ரூ.1800 கோடி; ஆனால் மத்திய அரசு வைத்த டிவிஸ்ட்... அன்பில் மகேஷ் விளக்கம்!!
தேசிய கல்விக் கொள்கையில் கையொப்பம் இட்டால் தான் பணத்தை தருவேன் என்ற நிலையில் மத்திய அரசு இருப்பதாக என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
வரும் 7 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி கல்வித்துறை சார்பில் ஆய்வு கூட்டத்தை நடத்த உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக மொழி தேர்வுகளுக்கு தமிழ் இருப்பவர்களின் மாணவர்கள் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்வுக்கு வராத மாணவர்களை ஒரு பள்ளிக்கு என்று எடுத்து பார்க்கும் பொழுது ஒரு பள்ளிக்கு ஒரு மாணவர் ஒன்றரை மாணவர் விகிதம் தான் வருகிறது. இது ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தாலும் அப்படி வராத மாணவர்களுக்கு சப்ளிமெண்ட்ரி தேர்வு எழுத வைக்கின்றோம். யாரும் கல்வியை விட்டு போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி இவரோட மிகப்பெரிய பக்தர்... ஆளுநர் ரவி சொன்ன ரகசியம்!!
தமிழ்நாடு முதலமைச்சர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வெற்றி நிச்சயம் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். கல்வியை விட்டு மாணவர்கள் வெளியே செல்லாமல் இருக்க எங்களது ஆசிரியர்கள் அந்த மாணவர்கள் எங்கு சென்றாலும் தேடிப் பிடித்து பள்ளிக்கு அழைத்து வந்து விடுவார்கள். ஒரு மாணவனுக்கு பொருளாதார நெருக்கடியால் படிப்பை தவிர்த்தால் கூட பள்ளி ஆசிரியர் தலைமை ஆசிரியர் அங்கு சென்று பெற்றோரை சமாதானம் செய்து அந்த மாணவனை பள்ளிக்கு அழைத்துவரும் பணியை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டும் 1800 கோடி ரூபாய் ஒப்புதல் அளித்துவிட்டு மீண்டும் தேசிய கல்விக் கொள்கையில் கையொப்பம் இட்டால் தான் அந்த பணத்தை தருவேன் என்ற நிலையில் மத்திய அரசு இருக்கிறது. வருகின்ற 7 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி கல்வித்துறை சார்பில் ஆய்வு கூட்டத்தை நடத்துகிறார். அந்த கூட்டத்தில் இது சார்ந்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேரளாவை போல் இனி தமிழ்நாட்டிலும்... விரைவில் அரசுப் பள்ளிகளில்... அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு!!