×
 

செம்ம...! நெல் கொள்முதல் விவகாரம்… பேரவையில் குட் நியூஸ் சொன்ன அமைச்சர் சக்கரபாணி…!

கடந்த ஆண்டு விட நெல் கொள்முதல் நடப்பாண்டு அதிகரித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி ஆறாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நான்கு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சட்டப்பேரவை கூடியது.கடந்த கூட்டத்தின் போது 2025-26 ஆம் ஆண்டுக்கான பொதுபட்ச தாக்கல் ஆனது. அதன் மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. 

தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆறு மாத காலத்தில் சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் நேற்று முன்தினம் சட்டபேரவை மீண்டும் கூடியது.

 3வது நாள் கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், கிட்னி திருட்டு விவகாரம், தொழில்துறை நிறுவனங்கள், ஆளுநருக்கு எதிரானது தீர்மானம் என பேரவை சூடு பிடித்துள்ளது. 

இதையும் படிங்க: ADMK வாங்குன கடனுக்கு நாங்க வட்டி கட்டுகிறோம்… அத பத்தி பேச உரிமையே இல்ல… அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்…!

இந்த நிலையில், நெல் கொள்முதல் தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி பேரவையில் உரை நிகழ்த்தினார். அப்போது, நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது என்று கூறினார். நடப்பாண்டு நெல் வரத்து பதிமூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

மத்திய அரசின் அனுமதி பெற்று செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். மேலும், மேட்டூர் நீர் திறக்கப்பட்டதால் கூடுதலாக 6.3 லட்சம் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க: கிடப்பில் மசோதா... வஞ்சிக்கும் கவர்னர்... பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதல்வர் தீர்மானம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share