×
 

என்ன ஆச்சு? அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி... பரபரப்பில் அறிவாலயம்..!

உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக அமைச்சர்களில் சீனியர்களில் ஒருவராக இருப்பவர் ஐ.பெரியசாமி. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும், திமுகவின் துணை பொதுச் செயலாளராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார். கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். 

பயங்கர ஆக்டிவ் அரசியல்வாதியாக வலம் வந்த ஐ.பெரியசாமிக்கு கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது. அதற்காக சிகிச்சையும் எடுத்து வருகிறார்.கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி வயிறுவலி, ஜீரண கோளாறு, நெஞ்சு எரிச்சல் காரணமாக மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 

இந்நிலையில் ஐ.பெரியசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வயிறு தொடர்பான பிரச்னைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: சூப்பரா பண்றீங்க ஸ்டாலின்... பாராட்டிய ஹண்டே... நேரில் சந்தித்து உரையாடிய முதல்வர்...!

ஐ.பெரியசாமியை பொறுத்த வரை திமுகவில் திண்டுக்கல் பகுதியில் மிகவும் செல்வாக்கான நபராக வலம் வருகிறார். பள்ளிக் காலம் தொட்டே திமுகவில் இணைந்து செயல்பட்டு வரும் இவர், வத்தலகுண்டு ஒன்றிய குழுத் தலைவராக முதலில் பொறுப்பு ஏற்றார். 1989 சட்டமன்றத் தேர்தலில் ஆத்தூரில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். அதன்பிறகு நடந்த மாவட்டச் செயலாளர் தேர்தலிலும் வென்று மாவட்டச் செயலாளராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். பின்னர் கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று முதலில் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும், பின்னர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

அண்மையில் ஐ.பெரியசாமி வீடு, அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். ஆனால், அதனை கூலாக கையாண்ட ஐ.பெரியசாமி, சோதனை முடிந்த பிறகு அதிகாரிகளுக்கு கைகொடுத்து சிரித்தபடியே அனுப்பி வைத்தார். அவருடைய வீட்டில் இருந்து சொத்து மற்றும் முதலீட்டு ஆவணங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டன. பணம், நகை எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “என் தொகுதி நிதியில் கட்டுனதை நீ எப்படி திறப்ப?” - ரேஷன் கடை திறப்பு விழாவில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share