"கொத்து, கொத்தாக நீக்கப்படலாம்"... திமுகவினரை எச்சரித்த அமைச்சர் ஐ.பெரியசாமி...!
திமுக ஆதரவு வாக்குகள் கொத்துக்கொத்தாக நீக்கப்படலாம் வாக்காளர் திருத்தத்தை அனைவரும் எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தல்
2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (SIR - Special Intensive Revision) முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வீடு தோறும் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த படிவங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, மாற்றம் செய்ய அல்லது நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்தப் பணியால் முறைகேடு நடைபெற கூடும் என திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சிதையன்கோட்டை பேரூராட்சியில் தேர்தல் ஆணையம் நடத்தும் எஸ் ஐ ஆர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: உண்டியலுக்கும் பாதுகாப்பு இல்ல... உயிருக்கும் பாதுகாப்பு இல்ல... முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்..!
இந்தக் கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். அவர் பேசும்போது கடந்த 2002 ல் வாக்காளர் திருத்தத்தின் போது , தேர்தல் ஆணையம் சுமார் எட்டு மாதங்களுக்கு மேலாக இந்த பணியை மேற்கொண்டது.
ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அரையும் குறையுமாக அள்ளித் தெளித்தது போல் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருப்பது தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என்றார்.
தற்போது பாரதிய ஜனதா கட்சியுடன் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக கைகோர்த்துக் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சிறுபான்மையினர் மற்றும் திமுக ஆதரவு வாக்குகள் கொத்துக் கொத்தாக நீக்கப்படலாம். எனவே கழகத் தோழர்கள் நிர்வாகிகள் ஒரு வாக்குகளை கூட தவறவிடாமல் வாக்காளர் திருத்தத்தில் பதிவு செய்து, தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள இந்த எஸ் ஐ ஆர் என்ற போரினை எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ராமன், முருகேசன் தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: வேண்டவே வேண்டாம்... SIR- க்கு வலுக்கும் எதிர்ப்பு... திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்...!