×
 

திமுகவுக்கு போட்டியே கிடையாது! தெறிக்க விடுவோம்... அமைச்சர் நேரு உறுதி..!

தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது என்றும் மகத்தான வெற்றி பெறுவோம் எனவும் அமைச்சர் நேரு திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு தொடர்பாக அமைச்சர் கே என் நேரு நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நயினார் நாகேந்திரனை தலைவராக போட்டு ஒரு கூட்டத்தைக் கூட்டி திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பேசி இருப்பதாகவும் அது அவர்களின் ஆசையிடம் தெரிவித்தார். வேரோடு பிடுங்கி நடவு செய்தால் விவசாயத்தில் பயிர் இன்னும் பெரியதாக சிறப்பாக வளரும் அதுபோல தான் பிடுங்க நினைத்தால் எங்கள் ஆட்சி இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.

கடந்த 15 வருடங்களாகவே இந்த வேலையை பாஜக செய்து வருவதாகவும் ஆனால் தமிழகத்தில் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. தொடர்ந்து திமுக கூட்டணி தான் வெற்றி பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அதிமுக பாஜக கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வருவதாகவும் தமிழகத்திற்கு கடந்த காலங்களில் மூன்று முறை வந்த அமித் ஷா ஒவ்வொரு முறையும் கூட்டணி ஆட்சி என்று பேசி வருவதாகவும் அது குறித்து அவரும் விளக்கம் சொல்லவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமியும் வாய் கூட திறக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் கே.என். நேரு சகோதரர் ரவிச்சந்திரன் மீது ED பதிவு செய்த வழக்கு ரத்து.. ஐகோர்ட் அதிரடி..!

அதிமுக ஆட்சியில் இருந்தபோது இரண்டு ஆட்சி அவர்களது கண்ணுக்கு தெரியவில்லை என்றும் அமித்ஷா பேசிய இதே ஊரில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என்றும் தெரிவித்தார். அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கூட பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதேபோல பாஜகவினரும் அதிமுக கூட்டணியை விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க.விற்கு போட்டியே கிடையாது என்றும் எதிரணியில் யார் நின்றாலும், நாங்கள் தான் மகத்தான வெற்றி பெறுவோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: வரலட்சுமி கணவருக்கு அரசு வேலை..! உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு அமைச்சர் மா.சு. ஆறுதல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share