×
 

எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்திருப்பது பரஸ்பர கூட்டணியில்லை என்றும் சம்மன் கூட்டணி எனவும் அமைச்சர் நேரு விமர்சனம் செய்தார்.

டெல்லிக்கு பழனிச்சாமி ஓடுவது தான் கூட்டணிக்கு தலைமை தாங்குவாரா என அமைச்சர் கே என் நேரு கேள்வி எழுப்பியுள்ளார். அமலாக்கத் துறையும் சிபிஐயும் சம்மன் அனுப்புவது போல தொகுதி பங்கிட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமியை அமித் ஷா அழைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இரவு 8.30 மணிக்கு சந்திப்பு என சொல்லப்பட்ட நிலையில் இரண்டு மணி நேரமாக அமித் ஷாவின் அழைப்புக்காக எடப்பாடி பழனிச்சாமி காத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் அமைத்து இருப்பது அதிமுக கூட்டணி அல்ல என்றும் பாஜக கூட்டணி என்றும் தெரிவித்துள்ளார். கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை என்றால் எம்ஜிஆர் மாளிகையில் தானே பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் ஆனால் அமித் ஷா வீட்டில் நடத்துகிறார் என்றும் கூறினார்.

எம்ஜிஆர் ஆசை ஆசையாய் உருவாக்கிய ராயப்பேட்டை அலுவலகத்திலாவது கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தக் கூடாதா என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவை இப்படி கொண்டு வந்த பழனிச்சாமி நிறுத்திவிட்டாரே என்று அதிமுக தொண்டர்கள் ஆதங்கத்தில் இருப்பதாக விமர்சனம் செய்தார். தேர்தல் முடியும் வரை அதிமுக தலைமை அலுவலகத்தை பெரிய திண்டுக்கல் பூட்டை போட்டு எடப்பாடி பழனிச்சாமி பூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெரும் எதிர்ப்பார்ப்பு..! பாஜக - அதிமுக தொகுதி பங்கீடு..! EPS, பியூஷ் கோயல் நாளை வெளியிடுவார்கள் என தகவல்..!

எடப்பாடி பழனிச்சாமிக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தினகரனும் அன்புமணியும் நிரூபிப்பதாகவும் தெரிவித்தார். கூட்டணிப் பேச்சுக்காக பொதுச் செயலாளர் டெல்லிக்கு படை எடுப்பது இபிஎஸ் காலத்தில் நடந்த வரலாற்று அதிசயம் என்றும் கூறினார். கூட்டணியில் அதிமுகவுக்கு கூடுதல் இடங்கள் கேட்டு அமித் ஷா வீட்டில் பழனிச்சாமி காத்துக் கிடப்பதெல்லாம் காலக்கொடுமை என்றார். அதிமுகவும் பாஜகவும் பரஸ்பரம் சம்மதித்து உருவான கூட்டணியா என்றும் இல்லை அது சம்மன் கூட்டணியா எனவும் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... தொடரும் இழுபறி..! தொகுதி பங்கீட்டு பஞ்சாயத்தை முடிக்க டெல்லிக்கு பறந்த EPS..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share