×
 

வெடிக்கும் மிசா சர்ச்சை... அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீற புகார்..!! சபாநாயகரிடம் முறையிட்ட திமுக..!!

அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீறல் புகார் கொடுக்கப்பட்டது.

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மு.க.ஸ்டாலின் மற்றும் அவசரகால கால மிசா சட்டம் குறித்து பேசியதைத் தொடர்ந்து, மின்சாரத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கூறிய கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அமைச்சர் நிர்மல் குமார், மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு உரிய அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லை என்றும், அக்காலத்தில் திருட்டு, கொள்ளை, பெண்கள் தொடர்பான வழக்குகளிலும் பலர் கைது செய்யப்பட்டனர் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் பெண்கள் மீதான அவதூறான பேச்சுக்காக கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தக் கருத்துகள் திமுக தரப்பில் கடும் எதிர்ப்பைத் தூண்டின. இந்தச் சர்ச்சை தொடர்ந்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பி ஆ.ராசா, அமைச்சர் நிர்மல் குமார் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தினார்.

மிசா குறித்து சந்தேகம் எழுப்பினால், அமைச்சரின் பிறப்பு குறித்தும் சந்தேகம் எழுப்பலாம் என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. பின்னர் ஆ.ராசா தனது கருத்தைத் திரும்பப் பெற்று வருத்தம் தெரிவித்தார். ஆனால் இந்தப் பேச்சு தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீதும் இதேபோன்ற புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர்களான எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்தனர். பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். 

இதையும் படிங்க: மிசாவில் சித்ரவதையை அனுபவித்தவர் மு.க.ஸ்டாலின்! அந்த வரலாற்றை மறக்க முடியாது என திருமாவளவன் பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share