×
 

ஏன் இந்த அவசர மனு..?? டி.கே சிவக்குமாரை இணைத்து திமுகவை விமர்சித்த அமைச்சர் நிர்மல் குமார்..!!

கடந்த ஒரு வார நிகழ்வுகள் இதையே உறுதிப்படுத்துவதாக நிர்மல் குறிப்பிட்டார். 

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், காவிரி நீர் விவகாரத்தில் திமுகவின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார். தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இந்தப் பிரச்சினையில் நற்பெயர் வரக்கூடாது என்பதற்காகவே திமுக தரம் குறைந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருடன் இணைந்து தமிழகத்தின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் முட்டுக்கட்டை போடும் முயற்சி நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

டி.கே. சிவக்குமாருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குடும்பத்திற்கும் கட்சி எல்லைகளைத் தாண்டிய நீண்டகால நெருங்கிய உறவு இருப்பதாக பல தரப்பினரும் கூறி வருவதை அமைச்சர் நினைவுபடுத்தினார். காங்கிரஸ் உயர் தலைமையின் வழிகாட்டுதல்களை விட ஸ்டாலின் கூறுவதையே சிவக்குமார் கேட்பார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற விருப்பமும் அவரிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வார நிகழ்வுகள் இதையே உறுதிப்படுத்துவதாக நிர்மல் குறிப்பிட்டார். 

திமுக கூறும் கருத்துகளையே சிவக்குமாரும் எதிரொலிப்பதாக அவர் கூறினார். காவிரி பிரச்சினையில் திமுக கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்தவிதமான உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் விஜய் நேற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்து, அதற்கான ஆலோசனைகளை நடத்தி பணிகளைத் தொடங்கிய நிலையில், திமுக அவசர அவசரமாக மனு தாக்கல் செய்துள்ளது. 

இதையும் படிங்க: ஸ்டாலினின் whatsapp அரசியல்...! மக்களை குழப்பாதீங்க..! அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்..!!

ஒரே மாநிலத்திலிருந்து பல மனுக்கள் தாக்கல் செய்வது குழப்பத்தை ஏற்படுத்தி, மாநிலத்தின் உரிமைகளைப் பின்னுக்குத் தள்ளும் ஆபத்தை உருவாக்கும் என்று அவர் எச்சரித்தார். காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஏற்பட்ட பல பின்னடைவுகளுக்கு திமுகவே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் நாளை உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் வழக்கு தொடரப்படும் என்று நிர்மல் அறிவித்தார். டி.கே. சிவக்குமாருக்கும் திமுக தலைமைக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தரம் கெட்ட அரசியல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 

இதையும் படிங்க: இனிமேல் அப்படி நடக்காது..! வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share