#BREAKING புதுசா வீடு கட்டுவோர் கவனத்திற்கு... அமைச்சர் பிரபு கொடுத்த வார்னிங்... அதிரும் தமிழகம்...!
எம்-சாண்ட், பி-சாண்ட் மற்றும் ஜல்லி விலையை உயர்த்தி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் பிரபு எச்சரிக்கை
தமிழகத்தில் எம்-சாண்ட், பி-சாண்ட் மற்றும் ஜல்லி ஆகிய கட்டுமானப் பொருட்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட குவாரிகள் மற்றும் கிரஷர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் பிரபு ஆலோசனை நடத்தினார். அண்மையில் எம்-சாண்ட், பி-சாண்ட் மற்றும் ஜல்லி விலைகள் அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் பிரபு, அரசு நிர்ணயித்த விலையை மீறி எம்-சாண்ட், பி-சாண்ட் மற்றும் ஜல்லி விற்பனை செய்யும் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் மீது விதிமுறைகளின்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: போதும்...! போதும்....!! - லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது... முதல்வர் விஜய்க்கு செம்ம ஷாக் கொடுத்த சிபிஐ...!
மேலும், குவாரிகளில் இருந்து கிரஷர்களுக்கு கொண்டு செல்லப்படும் கனிமப் பொருட்களை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக லாரிகளில் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்றும், விதிமீறல் கண்டறியப்பட்டால் குவாரி மற்றும் கிரஷர் நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பாறைகளை வெடிக்க பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்றும், தேவைக்கு அதிகமாக வெடிபொருட்களை குவாரிகளில் சேமித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிரபு எச்சரித்தார்.
கட்டுமானத் துறையில் முக்கிய மூலப்பொருட்களாக விளங்கும் எம்-சாண்ட், பி-சாண்ட் மற்றும் ஜல்லி விலைகள் சமீப காலமாக உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், விலை கட்டுப்பாடு மற்றும் விதிமுறை அமலாக்கம் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடனும் அமைச்சர் பிரபு ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்த கட்டமாக செங்கல் சூளை உரிமையாளர்களுடனும் ஆலோசனை நடத்தி, கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் போக்குவரத்து தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: “விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது...” - தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட கீதா ஜீவன்...!!