SIT - னாலும் தமிழ்நாடு போலீஸ் தான்...அரைவேக்காடு இபிஎஸ்! பந்தாடிய அமைச்சர் ரகுபதி
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு தீர்ப்பில் திமுகவை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்த நிலையில் அவர் ஒரு அரைவேக்காடு என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சட்டரீதியான நடைமுறையோ விசாரணை நடைமுறையோ தெரியாத எடப்பாடி பழனிசாமி தாம் ஒரு அரைவேக்காடு என்பதை அவரே அம்பலப்படுத்திக்கொள்கிறார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டது உண்மை தான். அந்த SIT தமிழ்நாடு காவல்துறைக்கோ திமுக அரசுக்கோ தொடர்பு இல்லாததா? அந்த SIT வேறு மாநில அதிகாரிகளோ ஒன்றிய அரசின் அதிகாரிகளோ இல்லை. அவர்கள் தமிழ்நாடு அரசின் காவல்துறை தானே? அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் SIT குழு சிறப்பாக செயல்பட்டது என்றால் திமுக ஆட்சியில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டது என்று தான் பொருள் என கூறினார்.
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை உடனடியாக கைது செய்து, நீதிமன்றக் காவலில் வைத்தது திமுக அரசின் காவல்துறை என்றும் அவர் ஜாமின் பெறாத வகையில் நீதிமன்றத்தில் வாதாடியது திமுக அரசின் வழக்கறிஞர்கள் தான் எனவும் வழக்கை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் நியமித்த SIT குழு பெண் அதிகாரிகள் மூவரும் அவர்களுக்கு துணையாக இருந்த விசாரணை குழுவும் திமுக அரசின் காவல்துறையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் என்றும் விளக்கமளித்தார். இப்படி, திமுக அரசின் கீழ் செயல்படும் காவல்துறையால் தான் ஐந்தே மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றம் ஞானசேகரனை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் எரிகிறது? உடல் முழுவதும் இவ்வளவு எரிவது நல்லதல்ல, மருத்துவரை அணுகுவது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது என கூறினார்.
இதையும் படிங்க: பொள்ளாட்சி வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டு ஆனது... எடப்பாடியை வறுத்தெடுத்த கனிமொழி!!
அதிமுக ஆட்சி அமைந்தால் "அந்த சார்கள்?" யார் என்பதை கண்டுபிடிப்போம் என எந்த அடிப்படை அறிவோ வெட்கவோ இல்லாமல் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.,பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை, கொடநாடு கொலை, கொள்ளை... போன்ற அதிமுக ஆட்சியில் நடந்த குற்றங்களின் விசாரணையை எடப்பாடி பழனிசாமி ஆட்சி எப்படி கையாண்டது என்பது உலகத்திற்கே தெரியும் என தெரிவித்தார். அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் திமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி "யார் அந்த சார்?" என சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் செய்த எடப்பாடி பழனிசாமி, அதற்கான ஆதாரங்களை விசாரணை நீதிமன்றத்தில் கொடுத்து நிரூபித்திருக்க வேண்டாமா?.,ஏன் ஆதாரங்களை இதுவரை தரவில்லை? அவதூறுக்கு ஆதாரம் இருந்தால் தானே தர முடியும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கூச்சம் இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறீர்களே! முதலமைச்சரை வசைப்பாடிய இபிஎஸ்...