×
 

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு இதுதான் வேலை..!! லிஸ்ட் போட்டு தாக்கிய அமைச்சர் ரகுபதி..!!

தமிழர்களுக்கு எதிராக பேசுவதே ஆளுநர் ஆர்.என் ரவியின் வேலை என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழர்களுக்கு எதிராகவே பேசுவதே அவரது முதன்மை வேலையாக இருப்பதாக, மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இன்று கடுமையாக விமர்சித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ரகுபதி, ஆளுநரின் சமீபத்திய பேச்சுகளை ‘அரசியல் நகர்வுகளாக’ முத்திரை குத்தினார். இந்த விமர்சனம், தமிழ்நாட்டில் ஆளுநர்-அரசு இடையே நீடிக்கும் மோதல்களுக்கு புதிய உருவம் அளித்துள்ளது.

அமைச்சர் ரகுபதி தனது பேச்சில், “ஆளுநர் ரவி தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் திராவிட இயக்கத்தின் மதிப்புகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். தமிழர்களுக்கு எதிராக பேசுவதே அவரது வேலை போல் தெரிகிறது. அரசியல் அமைப்பின் படி, ஆளுநர் நடுநிலையானவராக இருக்க வேண்டும், ஆனால் அவர் பாஜகவின் அரசியல் அஜெண்டாவை முன்னெடுக்கிறார்” என்று கூறினார். இந்த வார்த்தைகள், ஆளுநரின் சமீபத்திய செயல்களை குறிப்பிடுகின்றன.

இதையும் படிங்க: வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல்..!! தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது தவறான தகவலாகும். தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. பா.ஜ.க.வின் கமலாலயத்தில் வேலைக்கு சேர வேண்டிய அவர் கவர்னராக உள்ளார். பாஜகவின் ஊதுகுழல் அவர். பல்வேறு மாநிலங்களுடன் நல்லுறவு கொண்டுள்ள தமிழகம், அங்குள்ள முதலமைச்சர்களை தமிழகம் அழைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளது.

தமிழ்நாடு தனித்து நிற்பதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். தேர்தல் வருகிறது என்பதற்காக ஆளுநர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும், அதுவே பலம் என்று நினைக்கும் கட்சி திமுக என்று கூறினார். 

மேலும் மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி தரவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகலாம். மாநிலங்களில் 2 அதிகார மையங்கள் இருக்கக்கூடாது என்று நீதிமன்றமே கூறியிருக்கிறது. இந்தியை வைத்து மலிவான அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தமிழ்நாட்டுக்கு இல்லை. தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும். மொழிவாரி சிறுபான்மையினருக்கு தமிழகத்தில் முக்கியத்துவம் இல்லை என்ற கவர்னரின் கருத்து தவறானது என்றார்.

தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது; அது ஆளுநரின் கற்பனை என்றும் தமிழ்நாட்டில் வசிக்கும் மலையாளம், தெலுங்கு மொழி பேசுபவர்கள் அவரவர் தாய்மொழியை பேசுகின்றனர் என்றும் கூறினார். உச்சநீதிமன்றம் எப்போதும் ஆளுநரை பாராட்டியதில்லை, குட்டுதான் வைக்கிறது என்று கூறிய அவர், தமிழ் மொழிக்கு ரூ.150 கோடி, சமஸ்கிருதத்திற்கு ரூ.2500 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார்கள், 
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் தான் இருக்கின்றனவா? என்று கேள்வி எழுப்பினார். 

தேர்தல் வருவதால் ஏதாவது பேசலாம் என ஆளுநர் பேசி இருக்கலாம், எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ள ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கடும் கண்டனம் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தி.மலையில் 15,000 போலீஸ் பாதுகாப்பு..!! சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share