×
 

ரஜினிக்கு மிரட்டலா? அரசியல் ஆதாயம் தேடும் TVK... அமைச்சர் ரகுபதி காட்டம்..!!

ரஜினிக்கு மிரட்டல் விடுத்ததாக திமுக மீது ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டிய நிலையில் அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு மற்றும் போதை பொருட்களை தடுக்க தவறியதாகவும் தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்த தவெக தலைமை கழக நிர்வாகிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாநில செயலாளர் ஆனந்த், கொள்கைப் பரப்புக் குழு செயலாளர் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நினைத்தபோது திமுக குடும்பம் மிரட்டியதாக தெரிவித்தார். அரசியலில் ஒரு தலைவராக உருவாக வேண்டும் என்று நினைத்த ரஜினிகாந்த்க்கு மிரட்டல் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது அவர்களது ப்ரொடக்ஷனிலேயே படம் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தமிழ்நாட்டுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக" ... திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் என்று கூறினார். திமுக மிரட்டியது என்ற சொல்வது அப்பட்டமான பொய் என்று கூறியுள்ளார். அரசியல் ஆதாயம் தேடி விஜய் கட்சியினர் இவ்வாறு கூறுவதாக விளக்கம் கொடுத்தார். ஆனால் தங்களை பொருத்தவரை ரஜினிகாந்த் தங்கள் நண்பர் என்று கூறினார். 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சி வரவேண்டும் என்று தங்களுக்காக குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த் என்று தெரிவித்துள்ளார். எனவே அவரைப் பற்றியும் திமுக குறித்தும் எந்த கருத்தும் கூற தேவை இல்லை என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்..! தனிக்கட்சி ஆரம்பித்த புகழேந்தி திமுகவில் ஐக்கியம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share