×
 

அடுத்த முதல்வர் உதயநிதி? இபிஎஸ்-க்கு அமைச்சராக ரகுபதி பதிலடி!

உதயநிதி ஸ்டாலின் முதல்வராவதற்கு எல்லா தகுதியும் உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொரப்புரையின் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், உதயநிதிக்கு முதல்வராக என்ன தகுதி உள்ளது என நேற்றைய பரப்புரையில் இபிஎஸ் கேள்வி எழுப்பிய நிலையில் அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். எம்எல்ஏவாக சிறப்பாக பணியாற்றி அமைச்சர் பொறுப்பேற்ற உதயநிதிக்கு முதல்வராவதற்கு அனைத்து தகுதியும் உள்ளது என தெரிவித்தார்.

எந்த இயக்கமும் எதிர்க்கட்சிகளை கேட்டு முதலமைச்சரையோ, துணை முதலமைச்சரையோ தேர்ந்தெடுப்பதில்லை என்று கூறினார். திமுகவின் மூத்த தலைவர்களின் வற்புறுத்தலால் தான் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டதாகவும், சிறப்பாக பணியாற்றி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வராக எல்லா தகுதியும் உள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து, கந்தர்வகோட்டை அதிமுக பிரச்சாரத்திற்கு வந்தவர்களுக்கு பணம் விநியோகம் தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்தார். இபிஎஸ் பெட்டியை திறக்க ஆரம்பித்துள்ளார். மக்களிடம் பணம் போய் சேரட்டும், வாழ்த்துக்கள் என்றார். மேலும், வீடு வீடாகச் சென்று திமுகவினர் பிச்சை எடுப்பதாக விமர்சித்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் ரகுபதி, இயக்கத்தில் விரும்பினால் மட்டுமே இணைத்துக் கொள்ள முடியுமே தவிர கட்டாயப்படுத்தி பிச்சை எடுத்து இணைக்க முடியாது என கூறினார். இபிஎஸ் தனது கட்சியினரை அனுப்பி பிச்சை எடுத்து எத்தனை கோடி நபர்களை கட்சியில் இணைகிறார் என்று பார்ப்போம் எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பத்து தோல்வி பழனிச்சாமியின் முகத்திரை கிழிந்தது..! வறுத்தெடுத்த திமுக..!

அரசின் சாதனைகளை சொல்லித்தான் திமுகவில் சேர்க்கிறோமே தவிர கட்டாயப்படுத்தி சேர்க்கவில்லை என்றும் கூறினார். வீடு வீடாக திமுகவினர் சென்று பிச்சை எடுப்பதாக ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்ததற்கு அமைச்சர் ரகுபதி இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: "பதில் சொல்லுங்க அப்பா"... திமுக பிரதமர் வீட்டு கதவை தட்டினால் நியாயமா? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share