×
 

#SORRY.. ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி..!

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி அள்ளி விடுவதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறியிருந்தார். சாரி மா என அஜித்தின் தாயாருக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறியதை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையாக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசிய போது தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். ஒரு குற்ற சம்பவம் நடப்பது வருந்தக்கூடிய ஒன்று., ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று., அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் படுத்துவது, தேடுவது என்பது தமிழர்களின் பண்பாடு என்று தெரிவித்தார்.

இந்த பண்பாடு எல்லாம் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது. தமிழக முதலமைச்சர் இழப்பை சந்தித்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறியிருக்கிறார். வருத்தம் தெரிவிப்பதற்காக தான் முதலமைச்சர் சாரி என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினார் என்றும் கூறினார். வருத்தத்துடன் உங்களை தொடர்பு கொண்டிருக்கிறேன்., மிகவும் துயரமான நிகழ்வு., உங்களுக்கு நடந்ததை போல் யாருக்கும் நடக்க கூடாது என்று சொல்வதாக இது அமைகிறது என தெரிவித்தார். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தைரியமாக சொல்லக்கூடிய முதலமைச்சர், ஸ்டாலின் என்று கூறினார்.

இதையும் படிங்க: #SORRY..ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி

எடப்பாடி பழனிச்சாமியை போல எனக்கு தெரியல, பாக்கல, புகார் கொடுத்தல் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சாக்கு போக்கு சொல்லக்கூடிய முதலமைச்சர் அல்ல இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் என கூறினார். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்ளக்கூடியவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் இவையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது என்றும் கூறினார். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி அள்ளிவிட்டால் அதற்கெல்லாம் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் ரகுபதி கூறினார். ஆதாரம் எனக் கூறிக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி எதையாவது கூறினால் கூட அவற்றில் இருக்கும் உண்மையை திமுக நிர்வாகிகள் மற்றும் தலைமைக் கழகத்தினர் எடுத்துரைத்து வருவதாக தெரிவித்தார். 

திமுக அரசின் நான்காண்டுகளில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிர் இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், கல்வியிடையற்றலை குறைக்கும் நோக்கத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளிட்டவற்றை மிகவும் சிறப்பாக செய்து காட்டியவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என்று கூறினார்.

இதையும் படிங்க: அஜித் மீது திருட்டு பட்டம் சுமத்திய பெண் தலைமறைவு! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.. அவிழும் முடிச்சுகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share