உதயநிதி சங்க தமிழா பேசுறாரு.? மரிய வில்சனை கிண்டலடித்த MLA..! வெளுத்துவிட்ட ராஜ்மோகன்.!!
நிதி அமைச்சர் மரிய வில்சன் மொழியை விமர்சித்த எம்எல்ஏவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் விவாதத்தின் போது எழுந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்களுக்கு இடையே தமிழ் மொழி பயன்பாடு குறித்து எழுந்த வாக்குவாதம், அவைக்குள் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.எல்.ஏ. ராஜேந்திரன், நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது தமிழில் சில இலக்கணப் பிழைகள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
வரும் காலங்களில் பிழையின்றி, தூய தமிழில் பட்ஜெட்டை வாசிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அதேநேரம், அமைச்சர் ராஜ்மோகனிடம் இருந்து தமிழைக் கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இது நிதியமைச்சர் மரிய வில்சனை ஆத்திரப்படுத்தியது. “என்ன கேலி செய்கிறீர்களா? எனக்கு இப்படித்தான் பேசத் தெரியும். உங்களுக்காக நான் என் பேச்சு முறையை மாற்றிக்கொள்ள முடியாது” என அவர் உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தார்.
தனது பேச்சு வழக்கு இயல்பானது என்றும், யாருக்காகவும் அதை மாற்ற மாட்டேன் என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.இந்தப் பரிமாற்றத்தின்போது சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலையிட்டு, ராஜேந்திரன் தானே ‘பட்ஜெட்’ என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலாக ‘நிதிநிலை அறிக்கை’ எனத் தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!
அவைக்குள் தமிழ் மொழி குறித்த இந்த விவாதம் தொடர்ந்தபோது, பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்தார். ராஜேந்திரனின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில், “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சங்கத்தமிழிலா பேசுகிறார்?” என அவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வி, தமிழ் மொழித் தூய்மை குறித்து விமர்சனம் வைப்பவர்கள் தங்கள் பேச்சிலும் அதே தரத்தைப் பின்பற்றுகிறார்களா என்ற அர்த்தத்தில் அமைந்திருந்தது.
இதையும் படிங்க: பட்ஜெட்டால் பள்ளிக் கல்விக்கு உயர்வே..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!