'இது கல்வி வரலாற்றில் மைல்கல்'... புது முயற்சி.! அமைச்சர் ராஜ்மோகனை பாராட்டிய சீனு ராமசாமி..!
அமைச்சர் ராஜ்மோகனை இயக்குனர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராஜ்மோகன் சமீபத்தில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் வளர்ச்சிக்காக ஒரு முக்கியமான திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். 'உலக சினிமா' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், சிறப்புத் தேவை கொண்ட குழந்தைகளுக்கு கலை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கு வாயிலாக உலக அளவிலான அனுபவங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகனை இயக்குனர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார். ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு, 'உலக சினிமா' என்ற பிரபஞ்சத்தின் ஜன்னலைத் திறந்து வைத்திருக்கிறீர்கள். இந்தச் சிறப்பான முன்னெடுப்பிற்கு என் மனமார்ந்த பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.
உலக சினிமா என்பது திரையில் ஓடும் வாழ்வின் கண்ணாடி, மானுடத்தின் பாடம். உலக சினிமா ரசனைக் கல்வி என்பது பாடத்திட்டமாக மட்டுமல்லாமல், நம் கல்வி முறையில் ஒரு பண்பாடாகவே வேரூன்ற வேண்டும் எனத் தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்றார். இந்தத் திட்டத்தை அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி, உலக சினிமா ரசனைக் கல்வியைத் தாங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 14 நாள் ஜெயில்! தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
உலக சினிமா வழியாக மாணவர்களின் படைப்பாற்றல், உலகளாவிய பார்வை மற்றும் பன்முகத்தன்மையைச் செதுக்கும் இந்த மகத்தான முன்னெடுப்பு, நம் கல்வி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் எனவும் தெரிவித்தார். உங்கள் அர்ப்பணிப்புக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் அமைச்சர் ராஜ்மோகனுக்கு இதயபூர்வமான நன்றிகள் எனவும் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு!