×
 

திருச்செந்தூர் கோவில் டிக்கெட் விலை உயர்வா..? என்னதான் நடக்குது..! விளக்கிய அமைச்சர் ரமேஷ்..!!

திருச்செந்தூர் கோவில் தரிசன டிக்கெட் விலை உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் ரமேஷ் விளக்கம் கொடுத்தார்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தமிழகத்தின் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கடற்கரை அருகே அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கந்த சஷ்டி போன்ற திருவிழா காலங்களில் பக்தர் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.

இந்நிலையில், கோயில் நிர்வாகம் சேவை மற்றும் சிறப்பு தரிசன கட்டணங்களை கணிசமாக உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவின. இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விலைவாசி உயர்வு மற்றும் வருவாய் குறைவு ஆகியவற்றை ஈடுகட்டும் வகையில் இந்த உயர்வு திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “கோயில்களை மக்கள் நெருங்க விடாமல் தடுக்கும் நோக்கம் கொண்டது இந்த உயர்வு” என்று விமர்சித்துள்ள அவர்கள், மாற்று வருவாய் வழிகளை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இதையும் படிங்க: எதிர்க்கட்சி இல்லாத சட்டமன்றம்..! இந்த நிமிஷத்துக்காகவே காத்திருந்தேன்..! அமைச்சர் ரமேஷ் நெகிழ்ச்சி..!!

இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் திருச்செந்தூர் தரிசன டிக்கெட் விவகாரத்தில் மக்களிடம் கருத்து மட்டும்தான் கேட்கப்பட்டது என்றும் விலை உயர்த்தப்படவில்லை எனவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் ஏற்கனவே பரிசீலித்த நிலையில் கருத்து தான் கேட்டுள்ளோம் என்றும் விலை உயர்த்தப்படவில்லை எனவும் கூறி இருக்கிறார். மக்கள் கூறுவதன் படி தான் அரசு செயல்படும் என்று கூறிய அமைச்சர் மக்கள் முடிவை தாண்டி தமிழக வெற்றிக்கழக அரசு எந்த முடிவும் எடுக்காது என்றும் உறுதியளித்தார். 

இதையும் படிங்க: அமைச்சரிடமே லஞ்சம்..! கோவில் நிர்வாகத்தின் முகத்திரை கிழிந்ததா? வானதி சீனிவாசன் விளாசல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share