“புதுச்சேரியில் நடந்தது போல் ஈரோட்டில் நடக்கக்கூடாது, மீறினால்...” - விஜய்க்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக அமைச்சர்...!
ரூர் சம்பவம் போல் இனி ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் அரசு எச்சரிக்கையாக இருப்பதாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான சட்ட விதிகள் தொண்டர்கள் மற்றும் பொது மக்களை பாதுகாப்பதற்காக தான். கரூர் சம்பவம் போல் இனி ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் அரசு எச்சரிக்கையாக இருப்பதாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விண்ணப்பித்திருந்த 80 மாற்றுத்திறனாளிகளுக்கு 20.35 லட்சம் மதிப்பில் இலவச பேட்டரி ஸ்கூட்டர் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது இதனை செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மனிஷ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் இலவச ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது தொடர்ந்து 60 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக முதல்வர் உத்தரவின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இலவச பேட்டரி ஸ்கூட்டர்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது அவை அனைத்தும் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்கப்படும். இந்த இலவச பேட்டரி ஸ்கூட்டர்களை பயனாளிகள் ஸ்கூட்டராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம், சக்கர நாற்காலிகள் ஆகவும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையன் போனா நானும் போகனுமா?... அண்ணாமலையை சந்தித்த பின் டோட்டலாக மாறிய டிடிவி தினகரன்...!
பத்திரிகை மற்றும் டிவி செய்திகளில் அடிக்கடி தனது பெயர் வர வேண்டும் என்பதற்காக அண்ணாமலை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரை அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது கடந்த 2014 ஆம் ஆண்டில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அந்த தீர்ப்பு தான் அங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது அதனைத் தான் மாநில அரசும் அறநிலைத்துறையும் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு என்பது தனிப்பட்ட முறையில் குறிக்கோளோடு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பாகத்தான் மக்களும் அரசியல் கட்சிகளும் பார்க்கிறார்கள். இருப்பினும் தமிழக அரசு அதற்கான மேல்முறையீட்டை முறையாக செய்துள்ளது.
பாண்டிச்சேரியில் இன்று நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்திற்கு ஐந்தாயிரம் பேர் மட்டுமே அனுமதி என்ற நிலையில் அதற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருப்பதை அந்த மாநில அரசு அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளும். தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. எவ்வளவு பேர் கூட்டத்திற்கு வருவார்கள் என்ற விவரங்களை தெரிவித்த உடன் அரசு அதற்கு ஏற்ற இடத்தை வழங்கும் என தெரிவித்தார்.
மேலும் சொன்னதை காட்டிலும் அதிகமாக கூட்டத்தை கூட்டுவார்களேயானால் அதற்குரிய நடவடிக்கையை அரசு கண்டிப்பாக எடுக்கும். கடுமையான சட்ட விதிகள் விதிப்பது என்பது அந்த கட்சியினுடைய தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காகவே ஏனென்றால் கடந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு மாநாட்டில் முறையான தகவல்களை மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் வழங்காததால் அங்கு நடந்த கூட்ட நெரிசலில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சூழல் ஏற்பட்டது. அதேபோல் தமிழகத்தில் கரூரில் நடந்த சம்பவத்திலும் முறையான தகவல்களை தெரிவிக்காத காரணத்தால் 41 பேர் உயிரிழந்தனர்.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனி ஏற்பட்ட விடக்கூடாது என்பதில் இந்த அரசு எச்சரிக்கையாக இருக்கிறது அதற்காகத்தான் விதிமுறைகள் சற்று கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றத்தை பொருத்தவரை ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள் ஆனால் தமிழக அரசும் இந்து சமய அறநிலைத்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மேல்முறையீடும் செய்துள்ளது. அரசியல் செய்வதற்காகவே இதுபோன்ற வாதங்களையும் அறிக்கையிலையும் வெளியிட்டு வருகிறார்கள் ஆனால் அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏற்பாடு தரமா இருக்கணும்... பிசுரு தட்டக்கூடாது... ஈரோட்டில் விஜய் பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தில் செங்கோட்டையன் ஆய்வு...!