கோவை கொடூரம்..! "தப்ப முடியாது"..! சிறுமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அமைச்சர் சம்பத்குமார் வார்னிங்..!
கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் சம்பத்குமார் ஆறுதல் தெரிவித்தார்.
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் நிலை கதிகலங்க வைக்கிறது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் சம்பத்குமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.
இதையும் படிங்க: பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!
சிறுமியின் உடற்கூறாய்வு நடைபெறும் நிலையில் அமைச்சர் சம்பத்குமார் நேரில் சென்று கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சம்பத்குமார், சிறுமிக்கு நேர்ந்த கொடுமை மனவேதனையை அளிப்பதாகவும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உச்சபட்ச தண்டனை வழங்குவதை உறுதி செய்வோம் எனவும் தெரிவித்தார். மிக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பெண்களை இழிவு படுத்துவீங்களா..? திருமாவிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்..! அமைச்சர் ஆதவ் ஆவேசம்..!