×
 

விரைவில் திருச்செந்தூரில் புதிய தரிசன முறை அறிமுகம்... அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு...!

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த விரைவில் பிரேக் தரிசனம் செயல்பத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 14 மாதங்கள் கழித்து இன்று தங்கத்தேர் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு தங்கத்தேரை இழுத்து தொடங்கி வைத்தார். முன்னதாக திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கோவில்களுக்கு பணிகள் நடந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் தற்போது வரை 3600 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. இந்த ஆட்சியில் தான் தமிழ் கடவுள் முருகனுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. பழனியில் கடந்த வருடம் அனைத்துலக முருகன் மாநாடு நடந்துள்ளது. 21 நாடுகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டார்கள். 

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து குடமுழுக்கு பிரமாண்டமாக நடந்தது. அதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு நடந்தது. 131 முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் அறுபடை வீடுகளையும் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் மூன்று பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. திருச்செந்தூர் கோவிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் இந்த வருட இறுதிக்குள் நிறைவு பெறும். 

இதையும் படிங்க: டிக் அடித்த அமித் ஷா... நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் முக்கிய பதவி...!

முதலில் திருவண்ணாமலையில் பிரேக் தரிசனம் முறையை தொடங்க உள்ளோம். திருச்செந்தூர் கோவிலில் உள்ள சிறு சிறு பணிகள் நிறைவடைந்த பிறகு விரைவு தரிசனமும், திருப்பதியில் உள்ளது போல் பிரேக் தரிசனமும் ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். 

திருச்செந்தூர் கோவிலில் உள்ள பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து கேட்டபோது, நீதிமன்றத்தில் கோவிலில் உள்ள சாதக பாதகங்களை விளக்கி கூறுவோம். நீதிமன்றம் இறுதி தீர்ப்பில் என்ன கூறுகிறதோ அதன்படி வழிநடப்போம். 

குலசேகரன்பட்டினம் தசராத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உள்ள

 

 

 

இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்.. மக்கள் உரிமை மீட்பு 2.0 - லோகோவை வெளியிட்ட தேமுதிக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share