×
 
☰

அரிசி விலையைக் கட்டுப்படுத்த அதிரடி... ஆந்திராவில் இருந்து வரப்போகும் நெல் மூட்டைகள்... அமைச்சர் செங்கோட்டையன் அதி முக்கிய தகவல்...!

அரிசி விலை கிடு கிடு உயர்வு ஆந்திரா நெல் விற்பனைக்கு அனுமதி. அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ப.வெங்ட்ரமணன் தகவல்.

தமிழகத்தில், அரசி விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்தில் கொண்டு வந்து நெல் மூட்டைகள் விற்பனைக்கு அனுமதிக்கப்படும் என்று அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ப.வெங்கட்ராமணன் ஆகியோர் தெரிவித்தனர். 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன்பாடி சோதனை சாவடியில் இன்று காலை வருவாய் துறை அமைச்சர் கே.எ.செங்கோட்டையன், உணவு மற்றும் நுகர் பொருள் வாணிப கழகம் அமைச்சர் வெங்கட்ரமணன் ஆகியோர்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ஆந்திரா நெல் விற்பனையை கட்டுப்படுத்த ஆந்திரா நெல் தமிழகத்துக்குள் கொண்டு வர தமிழக அரசு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க... “இனி அரசே நேரடி விற்பனை”... சி.எம். விஜய் போட்ட அதிரடி உத்தரவு...!

இதனால் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் நெல் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரிசியின் விலை கிடுகிடுவென கடுமையாக உயர்ந்து வருகிறது.  

தமிழகத்தில் இருந்து ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு பாலிஷ் போட்டு தமிழகத்தில் மீண்டும் விற்பனைக்கு வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், வெங்கட்ரமணன் ஆகியோர்  பொன்பாடி சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டனர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்கள் எண்ணிக்கை மற்றும் சரக்கு வாகனங்கள் தொடர்பாக போக்குவரத்து சோதனை சாவடியில் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி ஆந்திராவுக்குள் கடத்துவதை முழுமையாக தடுக்க வேண்டும் என்றும், ஆந்திராவில் இருந்து தமிழகத்தில் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகள் அனுமதிக்க வேண்டுமென்று சோதனை சாவடி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.  

ஆந்திராவில் இருந்து அனைத்து பகுதிகளிலும் நெல் மூட்டைகள் கொண்டு வந்து விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்றும், அதே நேரத்தில் ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.எஸ்.செங்கோட்டையன் தெரிவித்தார். ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா போக்குவரத்து சோதனைச்சாவடி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அமைச்சர்களின் ஆய்வு போது அருகாமையில் உள்ள ஏ.எம்.பேட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதிப்பட்டு வருவதாக அமைச்சர் கே.எஸ்.செங்கோட்டையன்  புகார் தெரிவித்தனர். உடனடியாக திருத்தணி வட்டாட்சியர் அழைத்து தேவையான அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என உத்தரவிட்டார்.
 

இதையும் படிங்க: “புகார் கொடுங்க... நடவடிக்கை எடுக்கிறோம்...” - பதுக்கல் குறித்த கேள்விக்கு ஒரே போடாய் போட்ட உணவுத்துறை அமைச்சர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share