×
 
☰

தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

அதனால் செங்கோட்டையன் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாததாகவும் கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் சத்தியபாமாவுக்கு தொகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் தவெக உற்சாகமாகப் பணியாற்றினாலும், தாராபுரத்தில் நிலைமை வேறுவிதமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா, பதவி ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததை அடுத்து, இப்போது அதே தொகுதியில் தவெக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஆனால், அவர் செல்லும் பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவரே அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பிரச்சாரப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தவெக தலைமை, தாராபுரம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜை நியமித்துள்ளது. இதனால், கொங்கு மண்டலத்தில் செல்வாக்குள்ள அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலப் பொறுப்பாளராகத் தாம் இருக்கும்போது, அருண்ராஜை நியமித்தது சரியல்ல என்ற எண்ணம் நிலவுவதாகவும், அதனால் செங்கோட்டையன் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வர ரெடி! தாராபுரத்தில் செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

தொகுதியில் சுமார் 95 ஆயிரம் கொங்கு வேளாளர் கவுண்டர் வாக்குகள் உள்ளன. இவற்றைக் கைப்பற்றும் கட்சியே வெற்றி பெற வாய்ப்புள்ளது. தலித் வாக்குகள் திமுக-தவெக இடையே பிரிந்துள்ளன. நாட்டு கவுண்டரான அருண்ராஜை, கொங்கு வேளாளர் மக்கள் ஏற்கத் தயங்குவதாகவும், சமூகக் கணக்குகளைச் சமாளிப்பதில் அவர் திணறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேநேரம், அதிமுக இந்த வாக்குகளைத் திறம்பட ஒருங்கிணைத்து வருவதாகத் தெரிகிறது. தாராபுரத்தில் தவெக தோல்வியுற்றால், விஜய்க்கு நெருக்கமான அருண்ராஜ் ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளது என்றும், அதன் மூலம் செங்கோட்டையன் மேலும் நெருக்கம் காட்டலாம் என்றும் சில வட்டாரங்கள் முனுமுனுக்கின்றன. வேட்பாளர் சத்தியபாமாவை முழுமையாகப் பிரச்சாரத்திற்கு அனுப்புவதிலும் தடைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

முதலமைச்சர் விஜய் ஒருநாள் வந்தாலே போதும் என்ற நிலைப்பாடு நிலவுவதால், சத்தியபாமாவுக்கு அனைத்துத் தரப்பினரையும் சந்திக்க வாய்ப்பு குறைவாக உள்ளது. மதுராந்தகத்தில் தவெக வேகம் காட்டினாலும், தாராபுரத்தில் சவால்கள் அதிகம். இந்த இடைத்தேர்தல், தவெகவின் உள் ஒற்றுமையையும் சமூக ஒருங்கிணைப்பையும் சோதிக்கும் முக்கிய சோதனையாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: தவெக அரசுக்கு சவால்.. செங்கோட்டையன் பேட்டிக்கு நடுவே பவர் கட்.. அப்செட்டான நிர்வாகிகள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share