×
 

எடப்பாடி கொடுத்த அல்வா தான் எல்லாம்... அதிமுக துண்டு துண்டா போச்சே! அமைச்சர் சேகர்பாபு பதிலடி...!

எடப்பாடி பழனிசாமி கொடுத்த அல்வாவால்தான் அதிமுக பல கோணங்களில் சென்று கொண்டிருக்கிறது என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்தார்.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கிட்னி திருட்டு விவகாரத்தில் இடைத்தரகர்களை மட்டுமே திமுக அரசு கைது செய்த இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை திமுக எம்எல்ஏவின் மருத்துவமனை என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கிடையில், திமுகவின் உருட்டு கடை அல்வா என பாக்கெட்டுகளை காண்பித்து எடப்பாடி பழனிச்சாமி நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விமர்சித்தார்.

அந்தப் பாக்கெட்டுகளை அனைவருக்கும் கொடுத்தார். எடப்பாடி பழனிச்சாமி விநியோகித்த பாக்கெட்டுகளில் அல்வாவுக்கு பதில் பஞ்சு இருந்ததால் வாங்கியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அல்வா என நினைத்தால் பஞ்சு தான் இருக்கும் என்பது போல திமுக வாக்குறுதிகள் ஆகிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார். 

உருட்டு கடை அல்வா என பாக்கெட்டுகளை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கொடுத்த அல்வாவால்தான் அதிமுக பல கோணங்களில் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திராவிடத்தின் மாசற்ற வாரிசு அதிமுக தான்... எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

 அவர் கொடுத்த அல்வாவால் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து நின்று எதிர் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறினார். அல்வாவும் உணவு தான், தேவைப்படும் இடத்தில் அதையும் முதலமைச்சர் பரிமாறுவார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் உட்பட ஏராளமான அதிமுகவினர் பிரிந்து சென்ற நிலையில் அமைச்சர் சேகர்பாபு சுட்டிக்காட்டி பேசினார்.

இதையும் படிங்க: எடப்பாடியின் instagram அரசியல்… திமுகவை விமர்சிச்சா பெரிய ஆளா? பந்தாடிய அமைச்சர் சிவசங்கர்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share