விரைவில் அரசாணை வெளியீடு... ஒப்பந்த செவிலியர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன அசத்தல் குட்நியூஸ்...!
ஒப்பந்த செவலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறுவிடுப்பு அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மாசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணைகள் மற்றும் பணிமாறுதல் மூலம் 31 பணியாளர்களுக்கு பணிமாறுதல் ஆணைகளை வழங்கி, செவிலியர்களுக்கான பணிமூப்பு பட்டியலினை வெளியிட்டார்.
செவலியர்களுக்கான பணிமூப்பு பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஏற்கனவே மகப்பேறு விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறினார். பொங்கலுக்குள் 831 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், மீதமிருக்கும் 8000-த்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை வலுப்பெற்று, விரைவில் 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் காலிப்பணியிடங்களாக இதுவரை கண்டறியப்பட்ட 169 பணியிடங்களும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-2, போதகர் போன்ற பணியிடங்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டு அதன் மூலம் 400 பணியிடங்களும், புதிதாக கட்டப்பட்டு வரும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடங்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்குவது என்கின்ற வகையிலும் சுமார் 1,000 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு விரைவில் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் ஆணை வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், சங்கத்தினர் வைத்த மற்றொரு கோரிக்கை மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படவேண்டும் என்பதாகும். அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 1 வருட காலமாக அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் ஒப்பந்த செவிலியர்கள் விடுத்து வந்த கோரிக்கை இன்றைக்கு ஏற்கப்பட்டு அதற்கான அரசாணை மிக விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. பறவை காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கேரளாவிலிருந்து காய்ச்சலோடு வந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்குமான சாலைவழி இணைப்புகள் எங்கெல்லாம் இருக்கோ ஏறத்தாழ ஒரு 13 இடங்களில் இருக்கிறது. அந்த எல்லா இடங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது
இதையும் படிங்க: அமைச்சர் மிரட்டும் தொனியில் பேசுறாரு... செவிலியர் சங்க பொதுச்செயலாளர் பகிரங்க குற்றச்சாட்டு...!
நம்முடைய பொது சுகாதாரத்ததுறை அலுவலர்கள் அங்கிருந்து வருபவர்கள் இங்கிருந்து போவர்கள் தீவிரமாக கண்காணித்து பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மிகுந்த கவனத்தோடு தமிழ்நாடு தமிழ்நாட்டின் பொது சுகாதாரத்ததுறை அந்த பணியை கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு இணைப்பு தருகிற 13 இடங்களிலும் அது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக்கூறினார்
இதையும் படிங்க: அடிதூள்!! ஒரே ஆண்டில் 35 சதவீதம் லாபம்... உலகையே ஆட்டிப்படைத்த “புதிய தங்கம்”... இந்த வருடம் பணம் சம்பாதித்த உலோகம் இதுதான்...!