×
 

அமைச்சர் சுவாமிநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு... தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

அமைச்சர் சுவாமிநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னாள் நெடுஞ்சாலை துறை அமைச்சராகவும், தற்போதைய தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சராக மு.பே. சாமிநாதன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தகுந்த சிகிச்சை அளித்து வருகின்றனர்.2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கேயம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share