தூள் கிளப்பிய திமுக அமைச்சரின் வாரிசு... கொண்டாட்டத்தில் உடன் பிறப்புகள்...!
அமைச்சர் டிஆர்பி ராஜா மகள் நிலா பாலு மற்றும் அவரின் உறவினர் மகன் எஸ்எம் யுகன் ஆகியோர் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதில் அமைச்சர் டிஆர்பி ராஜா மகள் நிலா பாலு மற்றும் அவரின் உறவினர் மகன் எஸ்எம் யுகன் ஆகியோர் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
கஜகஸ்தான் நாட்டின் ஷிம்கெண்டில் 16வது ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 27 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் பல வீரர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு இளம் துப்பாக்கி சுடும் வீரர்கள் டிராப் பிரிவில் பதக்கம் வென்றுள்ளனர்.
டிராப் யூத் வுமன் பிரிவில் தனிஸ்கா தனிநபர் தங்கப் பதக்கத்தையும், நிலா வெள்ளிப் பதக்கத்தையும், ஆந்த்ரா வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். மேலும், தனிநபர் பிரிவில் தமிழக வீரர் எஸ்.எம். யுகன் தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார். டிராப் யூத் மென் பிரிவில் எஸ்.எம். யுகன் தங்கத்தை தன்வசப்படுத்தினார்.
இதையும் படிங்க: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்.. அடிக்கல் நாட்டினார் இஸ்ரோ தலைவர் நாராயணன்..!!
அணி மற்றும் தனிநபர் இரண்டு பிரிவுகளில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய எஸ்.எம். யுகன் துல்லியம் மற்றும் உறுதியை வெளிப்படுத்தி இரண்டு பிரிவிலும் பதக்கம் வென்றார். 14 வயதான எஸ்.எம். யுகன் கேலோ இந்தியா போன்ற போட்டி தொடர்களில் பங்கேற்று பதக்கம் வென்றிருக்கிறார். இதன்மூலம் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் இந்தியாவின் வளர்ந்து வரும் வீரராக திகழ்ந்து வருகிறார்.
இதுகுறித்து மகளை வாழ்த்தி டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இதற்கிடையே, யூத் வுமன் பிரிவில் பதக்கம் வென்ற நிலா பாலு தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா மகள் ஆவார். இதேபோல் எஸ்எம் யுகன் டிஆர்பி ராஜாவின் உறவினர் மகன் ஆவார். இதையடுத்து இருவரையும் வாழ்த்தி அமைச்சர் டிஆர்பி ராஜா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை என் குடும்பத்தினர் அனைவரும் என் அம்மா அருகில் இருந்தனர். துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள கஜகஸ்தான் செல்ல வேண்டியிருந்ததால், என் மகள் தன் பாட்டியின் ஆசிர்வாதத்தைப் பெற வந்தார். அம்மா இந்த உலகைவிட்டு எங்களை விட்டு சென்றபோது எனது மகள் விமான நிலையம் சென்றுவிட்டார். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால், துக்கத்தில் இருந்த எனது மகள் செல்ல விரும்பவில்லை. இந்த தருணத்தில் என் அம்மா இருந்தால் என்ன செய்வார் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். நீண்ட உரையாடலுக்கு பின் அழுதுகொண்டே நிலா விமானம் ஏறினார்.
எனினும், பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதால் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி அழுதுகொண்டே இருந்த நிலாவிடம் நாங்கள் அனைவரும் சொன்னது, 'உன் பாட்டிக்கு ஒரு பதக்கம் வென்று கொடு' என்பது தான். இப்போது, ஆசிய துப்பாக்கிச் சூடு சாம்பியன்ஷிப்பில் நிலா வெள்ளி வென்றுள்ளார். இதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதைத்தான், நாட்டிற்காக பதக்கங்களை வெல்வதை தான் என் என் அம்மா பார்க்க விரும்புவார் மாறாக அழுவதை அல்ல." என்று நெகிழ்ந்திருக்கிறார்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகளான நிலா ராஜா, கடந்த 2023ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற 66ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காமன்வெல்த் 2030 முன்மொழிவு... மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!