அனல் பறக்கும் பிரச்சாரம்..! தி. மலையில் எ. வ.வேலு புறாக்களை பறக்கவிட்டு வாக்குச் சேகரிப்பு..!
அமைச்சர் எ. வ. வேலு புறாக்களை பறக்கவிட்டு வாக்குச் சேகரித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். மார்ச் 30 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் நேற்றுடன் கால அவகாசம் முடிந்தது. பல்வேறு வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
தங்கள் தேர்தல் பரப்புரையையும் வேட்பாளர்கள் தொடங்கி நடத்தி வருகின்றனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
சமீபத்தில் திருவண்ணாமலைக்குச் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை வேட்பாளரும் அமைச்சருமான எ.வ. வேலுவை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக திமுக வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுகவின் சாதனைகளை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த மக்கள்... வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆவேசம்..!!
இந்த நிலையில் திருவண்ணாமலையில் எ.வ. வேலு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். திறந்தவெளி ஜிப்பில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்டார். அப்போது பெண்கள் பூக்கள் தூதியும், ஆண்கள் பூசணிக்காய் வைத்து திருஷ்டி சுற்றியும் வேட்பாளர் வேலுவுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது எ.வ. வேலு புறாக்களை பறக்க விட்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: மீண்டும் சைதாப்பேட்டையில் களமிறங்கும் மா.சு..!! இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!