×
 

டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் உயர்வு..! 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் விஜய்..! அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு..!!

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். டாஸ்மாக் விற்பனையாளர்களின் ஊதியம் 19,413 ரூபாய் என்றும் மேற்பார்வையாளரின் ஊதியம் 22,213 ரூபாய் எனவும் தெரிவித்தார். டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.  டாஸ்மாக் ஊழியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றி இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஊதிய உயர்வால் அரசுக்கு 110 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கினால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்த்தப்படாது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான ESI அட்டை வழங்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். எஃப் எல் 3 பப்புகளில் 21 வயது உட்பட்டவர்களுக்கு மது கொடுத்தால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார். திமுக ஆட்சி காலத்தில் மது பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்ததிலிருந்து கூடுதலாக வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: "மொந்தை தான் வேற.. சரக்கு ஒண்ணு தான்"..! எச்சில் இலை விஷயம்... தவெகவை கடிந்த ஜெயக்குமார்..!

இருப்பினும் அவ்வப்போது பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் மது பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

இதையும் படிங்க: தமிழகத்தில் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை! அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share