ப்ரீ..! ப்ரீ...!! - இந்த மாத இறுதிக்குள் அரசாணை... கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி வெளியிட்ட குட்நியூஸ்...!
சட்டமன்ற நேரலை நிறுத்தப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என அமைச்சர் விஜய் பாலாஜி புதிய விளக்கம்.
இலவச வேட்டி சேலை திட்டத்திற்கான அரசாணை இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு கோட்டை பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி, சட்ட மன்றத்தில் துறை சார்ந்த கேள்விகள் கேட்காமல் சம்பந்தமில்லாத கேள்விகளை எதிர்கட்சிகள் எழுப்புகிறார்கள். கடந்த ஆண்டு அவர்கள் செய்த தவறை மறைப்பதற்காக புதிது புதிதாக பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள் முதலமைச்சர் பேச வேண்டிய நேரத்தில் பேசுவார் இதற்காகத்தான் நேற்றே பதில் சொல்லியிருக்கிறோம் கொளத்தூரில் முதலமைச்சர் பேசிய சிறிது நேரத்திலேயே என்ன நடந்தது என்று தமிழ்நாடு மக்களுக்கு தெரியும்.
சட்ட்மன்றத்தில் நேரடி ஒளிபரப்பு நாங்கள் ரத்து செய்யவில்லை அது நடந்து கொண்டுதான் இருந்தது அதில் டெக்னிக்கல் ஃபால்ட் (தொழில்நுட்ப கோளாறு) ஏற்பட்டதால் நேரடி ஒளிபரப்பு தடைப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சி முழுமையாக தான் ஒளிபரப்பானது சின்ன இடையூறு ஏற்பட்டதால் தடைபட்டது.
இதையும் படிங்க: "அத்துமீறும் ஆளுங்கட்சியினர்"..! பள்ளிக்கூடத்தில் இப்படியா..? TTV தினகரன் விளாசல்..!!
மேகதாது தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்ததை ஏற்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு, அதை அரசியலுக்காக எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர் கட்சி அரசியலுக்காக எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு விமர்சனம் செய்கிறார்.
கர்நாடக முதலமைச்சர் உடன் இந்த அரசு பேச்சுவார்த்தை நடத்துமா என்ற கேள்விக்கு,
இது முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார்.
இலவச வேட்டி சேலைக்கான டெண்டர் விடுவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றோம். இந்த மாத இறுதிக்குள் அரசாணை வெளியிடப்படும் என்றார்.
இதையும் படிங்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!