×
 

ஸ்டாலினின் மிசா சர்ச்சை... முதல்வர் விஜயை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பான முதல்வர் விஜயின் பேச்சை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கடந்தகால அனுபவங்களை மையப்படுத்தியதால், தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுகவின் ஆட்சிக் காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளைப் பற்றி விரிவாகப் பேசினார். 

அப்போது அவர் அவசரநிலைக் காலத்தில் நடைமுறையில் இருந்த மிசா சட்டத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். திமுகவினர் தங்களது போராட்ட வரலாற்றை மிசா சிறைவாசத்தை வைத்து மார்தட்டிக் கொள்வதாகச் சாடிய அவர், அந்தக் காலகட்டத்தின் பின்னணியை மக்கள் நன்கு அறிந்திருப்பதாகத் தெரிவித்தார். பேச்சின் இடையே அவர் தனது தாடையைத் தொட்டுக் காட்டும் உடல்மொழியை வெளிப்படுத்தியது, திமுக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பைத் தூண்டியது. அவர்கள் இதை ஸ்டாலினின் சிறைக் காலக் காயத்தை உருவகப்படுத்திக் கேலி செய்வதாகக் கருதினர்.இதையடுத்து பேரவையில் அமளி ஏற்பட்டது. திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

அடுத்த நாள் அவையில் இது குறித்து விவாதம் எழுந்தபோது, பேச்சுகளை நீக்கக் கோரி அவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பேரவைத் தலைவர் அதை நிராகரித்ததால், மாஷல்கள் மூலம் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். திமுக தரப்பில் இதை ஜனநாயக விரோத நடவடிக்கையாகக் கண்டித்தனர். ஆட்சியின் தோல்விகளை மறைக்கத் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவதாக முதலமைச்சர் மீது குற்றஞ்சாட்டினர்.இந்தச் சர்ச்சை தொடர்ந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 10 ஆம் தேதி ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் அவர் முதலமைச்சர் விஜயை ‘தம்பி’ என்று அழைத்துப் பேசினார்.சிறையில் அவர் சந்தித்த கொடுமைகளை உருக்கமாக விளக்கினார். 

இதையும் படிங்க: ஹெட்மாஸ்டர் தலையில் சுமை... வெட்ட வெளிச்சமாச்சு...! TTV தினகரன் விளாசல்..!!

இந்த நிலையில், முதலமைச்சர் விஜயின் பேச்சைக் கண்டித்து திமுக தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்தது. மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் காலை 10.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பெருமளவில் பங்கேற்றனர். முதலமைச்சரின் பேச்சை ஆணவப் பேச்சாகக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஸ்டாலினின் தியாகத்தையும், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் வரலாற்றையும் அவமதித்ததாகக் குற்றம்சாட்டினர். ஆட்சியின் நிர்வாகத் தோல்விகளை மறைக்க இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க: லண்டனில் கால் வைத்ததுமே விஜய் எடுத்த அதிரடி முடிவு... தமிழர்களுக்கு காத்திருக்கும் ஸ்வீட் சர்ப்ரைஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share