கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை! சென்னை எம்.ஜி.ஆர். நகரில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு!
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவினர் ராட்சத கிரேன் ஒன்றின் உதவியுடன் பிரம்மாண்டமான மலர் மாலையை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். கிரேன் மூலம் சுமார் 20 அடிக்கும் மேலான உயரமான மாலை மெதுவாக இறக்கப்பட்டு இ.பி.எஸ்-க்கு அணிவிக்கப்பட்ட போது, தொண்டர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.
இதையும் படிங்க: நீர் விடுத்த வடு போல திமுக - காங்கிரஸ் விரிசல் மறையும்! திருச்சியில் வைகோ அதிரடி!
மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கைகள் அதிர, வீர வணக்கம் செலுத்தும் வகையில் தொண்டர்கள் புடைசூழ எடப்பாடியார் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை மாநகரின் முக்கியப் பகுதியான எம்.ஜி.ஆர். நகர் முழுவதும் அதிமுக கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.
சமீபகாலமாக அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்தத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்குக் கொடுக்கப்பட்ட இந்த கிரேன் மாலை வரவேற்பு, தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026-ல் கோட்டையை அதிமுக பிடிக்கும் என்பதற்கு இந்த மக்கள் கூட்டமே சாட்சி என அதிமுக நிர்வாகிகள் பெருமிதம் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி திமுக அரசின் மீதானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார். குறிப்பாகச் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்து அவர் ஆவேசமாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யாருக்கும் பாதுகாப்பு இல்லை! அடையாறு படுகொலை மற்றும் நந்தனம் வன்கொடுமைக்கு தவெக தலைவர் கண்டனம்