×
 

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்... சிபிஐ விசாரணை கோரும் நயினார்...!

நகராட்சி நிர்வாகத் துறை ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் 2,538 பதவிகளை உள்ளடக்கிய பண மோசடி நடந்துள்ளதாகவும் ஒரு பதவிக்கு 35 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 2,538 பதவிகளுக்கு விண்ணப்பித்த 1.12 லட்சம் நபர்களில், கடினமாகப் படித்து, விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்களுக்கு, ரூ.35 லட்சம் லஞ்சம் வாங்க முடியாததால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை திமுக அரசு வேட்டையாடி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்ற நபர்களைப் பணியில் அமர்த்தி 888 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது திமுக ஆட்சியில் ஊழல் வேரூன்றி இருப்பதை வெளிப்படுத்துகிறது என்றார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு 2,538 காலிப் பணியிடங்களுக்கு 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தங்கள் சொந்த பாக்கெட்டுகளை நிரப்ப ஒரு காலிப் பணியிடத்திற்கு 35 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு, தகுதியற்ற நபர்களைப் பணியமர்த்தி, பல்லாயிரக்கணக்கான திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பை திராவிட மாடல் அரசு பறித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இரு மாதங்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலின் சொந்தக் கரங்களால் பணியாணை வழங்கப்பட்ட பணித்தேர்விலேயே இத்தகைய முறைகேடு நடந்திருக்கும் நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் இது போன்ற எத்தனை மோசடிகள் நடந்திருக்கும் என யோசிக்கையில் மலைக்க வைக்கிறது என கூறினார்.

இதையும் படிங்க: அவர் உயிருக்கு ஆபத்து..! விஜய்க்கு ஃபுல் சப்போர்ட்... விமர்சனங்களை தூளாக்கிய நயினார்..!

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல் செய்து தமிழகத்தின் கஜானாவைக் காலி செய்தது போதாதென்று, தற்போது நேர்மையான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வரும் திமுக அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும் வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: SIR புதுசா முதல்வரே? RK நகர் தேர்தலுக்கு CASE போட்டது யாரு... விளாசிய நயினார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share