×
 

கிள்ளி குடுக்க உங்க அப்பா வீட்டு பணமா ஸ்டாலின்? ஊக்கத் தொகையை உயர்த்த ஜெயக்குமார் வலியுறுத்தல்...!

ஊக்கத் தொகையை குறைத்து வழங்கி திமுக அரசு அநீதி இழைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இளையோர் ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த தமிழக வீராங்கனை கார்த்திகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆடவர் விளையாட்டு பிரிவில் அபினேஷ் மோகன் தாஸ் என்பவர் இந்திய அணியில் இடம் பெற்று தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கம் வென்றுள்ளார். விளையாட்டு வீரர்கள் இருவருக்கும் தமிழக அரசு சார்பில் 25 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். ஆசியா இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.25 லட்சம் மட்டும் அறிவித்து திமுக அரசு அநீதி இழைத்துள்ளது என தெரிவித்தார். கண்ணகி நகர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதியில் இருந்து, சரியான மைதானம்‌ முதல் உடலுக்கான ஊட்டச்சத்து வரை என எல்லா கஷ்டங்களையும் கடந்து கார்த்திகா வெற்றி பெற்றுள்ளார் என்று கூறினார்.

எனவே தமிழ்நாட்டை சேர்ந்த இரு வீரரக்ளுக்கும் தற்போது வழங்கியுள்ள ஊக்கத்தொகையை தலா ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தான் கண்ட கனவை கார்த்திகா போன்ற எளிய பிள்ளைகளின் மூலம் நிறைவேற்றி வெற்றிக்கு முதற்காரணமாக இருந்துள்ள கண்ணகி நகர் அணியின் பயிற்சியாளர் ராஜிக்கு ஊக்கத்தொகையும் அரசுப்பணியும் வழங்கி அரசு கவுரவிக்க வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: திடீர் சுறுசுறுப்பாகும் திமுக எம்.எல்.ஏ-க்கள்!! அனல் பறக்கும் ஆன்லைன் விளம்பரம்! பக்கா திட்டம்!

கண்ணகி நகர் போன்ற பகுதிகளில், அன்றாட வேலைக்கு அலையும் மக்களாக அடுத்த தலைமுறை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழக அரசு வழங்கிய ஊக்கத்தொகை மிக மிகக் குறைவு என பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கிடப்பில் மசோதா... வஞ்சிக்கும் கவர்னர்... பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதல்வர் தீர்மானம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share