எல்லாம் அரசியல்... தட்டிவிடுங்க! வெளிநாட்டு பயணம் குறித்த விமர்சனத்திற்கு முதல்வர் பதிலடி
அரசியல் காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்கள் விமர்சிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜெர்மனி மற்றும் லண்டன் பயணம் தொடர்பாக கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு ஜெர்மனியின் டசெல்டோர்ஃப் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக கூறி உள்ளார். தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று வரவேற்பளித்தனர். குழந்தைகள் பதாகை ஏந்தி அன்பைப் பொழிந்தனர் என தெரிவித்தார். பின்னர், அறிவாலயமாகத் திகழும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்திற்குச் சென்றதாகவும், நாம் இரண்டு முறை அளித்த நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, ஜெர்மனியில் தமிழ்ப் பணி தொடர்கிறது என்றும் கூறினார்.
டசல்டோர்ஃப் நகரில் ஐந்து நிறுவனங்களுடன் தனித்தனி சந்திப்புகள் நிகழ்ந்ததாகவும், ரூ.3201 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான MoU-க்கள் போடப்பட்டதாகவும் கூறினார். பின்னர், முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான MoU-க்கள் கையெழுத்தாகின என்றும் தெரிவித்தார்.
NRW-வின் மினிஸ்டர் பிரசிடென்ட் ஹென்ரிக் வுஸ்ட் தன் மீது அன்புகொண்டு நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அரசின் உயரதிகாரிகளுடன் தனது கான்வாயையும் அனுப்பியிருந்தார் என்றும் வாசலிலேயே காத்திருந்து வரவேற்றார் என்றும் அங்கிருந்த விசிட்டர் புத்தகத்தில், NRW - தமிழ்நாடு இணைந்து வெற்றிபெறுவோம் என எழுதிக் கையெழுத்திட்டேன் என்றும் கூறிய முதலமைச்சர், அங்கிருந்து மனநிறைவோடு லண்டனுக்கு புறப்பட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பறிபோகும் அப்பாவி உயிர்கள்! இது எந்த பேக்கேஜ்ல வரும் CM ஸ்டாலின்? பந்தாடிய இபிஎஸ்
இதனிடையே, வெளிநாட்டு பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காகவே விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான இது போன்ற விமர்சனங்களை புறந்தள்ளி ஒதுக்கி விடுமாறு கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புக்காக முதலீடுகள் ஈர்க்கப்படுவதாக முதல்வர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பொய் செய்தி பரப்புறதுதான் பாசிச கும்பலின் முழு நேர வேலை! விளாசிய உதயநிதி