×
 

ஓரணியில் தமிழ்நாடு நிலவரம் என்ன? திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் தீவிர ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  திமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடத்தி வரும் ஆலோசனைகள் இந்த “ஓரணியில் தமிழ்நாடு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன.

இத்திட்டம் மக்களை ஒருங்கிணைத்து, அரசின் திட்டங்களையும் சேவைகளையும் திறம்பட வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்களின் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி OTP பெறும் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த ஓடிபி பெறும் செயல்முறை சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓடிபி பெறும் முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.

திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை எவ்வளவு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக முதலமைச்சர் கேட்டறிவார் என கூறப்பட்டுள்ளது. 

வாக்குத்திருட்டு தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த இடங்களில் கட்சியின் பலத்தை வலுப்படுத்த வேண்டும், மக்களை சந்தித்து எவ்வாறு திமுக சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி..! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்..!

இந்த கூட்டத்தில் திமுகவை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: மண்டையை உடைத்த திமுக பெண் கவுன்சிலர்... ராகு காலத்தில் புகார் எடுக்க மாட்டோம் என மறுத்த போலீஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share