நினைவைப் போற்றுவோம்... காவலர் வீரவணக்க நாள்... முதல்வர் ஸ்டாலின் மரியாதை...!
காவலர் வீரவணக்க நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் நாள் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் பலியாகினர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டு தோறும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாள், தேசிய அளவில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டில் இது உள்ளூர் சூழலுடன் இணைந்து, மாநில காவல்துறையின் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் மாவட்ட அளவில், திருவண்ணாமலை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, கரூர் போன்ற இடங்களில் ஆயுதப்படை மைதானங்களில் கூட்டு அணிவகுப்பு, பேரணி மற்றும் விருது வழங்கும் விழாக்கள் நடைபெறுகின்றன.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள போலீஸ் மெமோரியல் பூங்காக்கள், அந்த தியாகிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட சிலைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அங்கு வீரவணக்கம் செலுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், காவலர்கள் வீரவணக்க நாளை ஒட்டி காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மைலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியின் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
இதையும் படிங்க: கரூர் அவதூறு... தவெக நிர்வாகிக்கு அக். 24 வரை காவல்... சிறையில் அடைத்த போலீஸ்...!
காவல்துறையில் பணிபுரிந்து மரணமடைந்த காவல் துறையினரின் குடும்பங்களுக்கு காப்பீட்டு தொகை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். மேலும் காவல்துறையில் தகவல் பதிவு உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிக்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: பெங்களூருவில் பதுங்கிய புஸ்ஸி ஆனந்த்? விரைந்தது தனிப்படை...!