×
 

அதிமுக ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி… பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இருக்கா? விளாசிய முதல்வர் ஸ்டாலின்..!!

ஈரோட்டில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசி எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகதை இருக்கிறதா என்று கேட்டார்.

ஈரோட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரையில் மேற்கொண்டார். வேட்பாளர்கள் முத்துச்சாமி, தோப்பு வெங்கடாசலம், கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுந்தரம், மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், சிவபாலன், நல்லசிவம், சந்திரசேகர், சாமிநாதன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அப்போது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திமுக வேட்பாளரும் முத்துசாமி திமுக ஆட்சியில் தான் அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியின் சாதனை திட்டங்களால் பயனடைந்தவர்கள் வீட்டுக்கு ஒருவராவது இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். மகளிர் மேம்பாட்டுக்காக பார்த்து பார்த்து திமுக அரசு திட்டங்களை செய்திருப்பதாக கூறியுள்ளார். பல மாநிலங்களுக்கு திமுக அரசின் திட்டங்கள் முன்னோடியாக இருக்கப்போகிறது என்று கூறியுள்ளார்.

குழந்தை திருமணம் பாலியல் வன்கொடுமை வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண பாலின வள மையங்களை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை விளைவித்தால் மரண தண்டனை விதிக்கும் சட்டம் குறித்த வாக்குறுதி கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். செல்லுமிடமெல்லாம் குடும்பத்தில் ஒருவராக நினைத்து தன்னை வரவேற்பதாகவும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் அதனால் தான் தைரியமாக வேலைக்கு செல்கிறார்கள் என்றும் தெரிவித்தார். அதிக அளவில் தமிழ்நாட்டில் பெண்கள் வேலைக்குச் செல்வதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு தயாரா? வெற்றி உறுதியா..? ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை..!!

ஒரு தேர்தலில் கூட ஸ்டாலினும் திமுகவினரும் ஜெயிக்க விட மாட்டார்கள் என்ற வயிற்று எரிச்சலில் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதாகவும் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகதை இருக்கிறதா என்று கேட்டார். அதிமுக ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்றார். அந்தக் கதறல் கூட பழனிச்சாமியின் மனசாட்சியை உறுத்தவில்லையா என்று கேட்டார். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை பொதுவெளியில் சொல்லி மிரட்டல் விடுத்தார்கள் என்றும் ஆனால் அந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு பெறப்பட்டு நஷ்ட ஈடு பெற்றுக் கொடுத்தது திமுக ஆட்சி தான் என்று கூறினார். கால்களை வாரி விட்டு அரசியலுக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு குறித்து பொய், புரட்டை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிரவிடும் அரசியல் களம்... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share