×
 

தோற்றாலும் துவளாத திமுக தலைவர்..! நன்றி சொல்ல கொளத்தூருக்கு செல்லும் ஸ்டாலின்..!

தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு செல்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வு, திமுக தலைவரும் முதலமைச்சராகவும் இருந்த மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்தது. 2011 முதல் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்று, கொளத்தூர் தொகுதியின் ஒரே எம்எல்ஏவாக இருந்த ஸ்டாலின், இந்த முறை தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

ஸ்டாலின் 74,202 வாக்குகளைப் பெற்ற நிலையில், பாபு வெற்றி பெற்றார். இது ஸ்டாலினுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட தோல்வியாகும். இந்த அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் உயரிய அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்டாலின். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இன்று மாலை கொளத்தூர் தொகுதிக்கு நேரில் செல்லத் திட்டமிட்டுள்ளார்.

தோல்வியடைந்த தொகுதியில் தனக்கு ஆதரவு அளித்த வாக்காளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதே இந்த வருகையின் நோக்கம். கொளத்தூர் தொகுதி ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானது. கடந்த 15 ஆண்டுகளாக ஸ்டாலின் இங்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். சமீபத்தில் கூட, தொகுதியில் உள்கட்டமைப்பு திட்டங்கள், நூலகங்கள், மழைநீர் வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி வைத்திருந்தார்.

இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் இடம்பெற போவது யார்..? விஜய் முக்கிய ஆலோசனை..!!

இருப்பினும், இந்தத் தேர்தலில் தவெகவின் அலை மற்றும் மாற்றம் விரும்பும் மக்கள் உணர்வு அவருக்கு சவாலாக அமைந்தது. தோல்வியை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குவதாக அறிவித்தார். தனது தொகுதி மக்களை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளது அவரது அரசியல் பக்குவத்தைப் பிரதிபலிக்கிறது. 

இதையும் படிங்க: அரசியலின் பெரும் திருப்புமுனை..! தமிழக முதல்வராகும் விஜய்க்கு சீமான் வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share