×
 

தேர்தல் முடிவு நெருங்கியாச்சு..! திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய சந்திப்பு..!!

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு நிகழ்த்தினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்குகள் எண்ணிக்கை வரும் மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், பல்வேறு ஊடகங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் காட்டியுள்ளன.

இந்த நம்பிக்கைக்குப் பின்னணியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். கொடைக்கானலில் நான்கு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு திரும்பிய ஸ்டாலின், உடனடியாக கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஈ.வி. வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுடன் தனிப்பட்ட விவாதங்களும் நடைபெற்றதாகத் தெரிகிறது.ஆலோசனையின் மையப் பொருளாக வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ஆம் தேதி வரை கட்சியினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதே இருந்தது.

இதையும் படிங்க: வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறு பூத் ஏஜெண்டுகள், முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கினார். எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கவும், எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் உரிய பிரதிநிதிகளை நியமித்து கண்காணிக்கவும் வலியுறுத்தப்பட்டது. 

தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை சந்தித்தார். கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி மாவட்டங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களுடன் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கலர் நிலவரம் குறித்து வேட்பாளர்களிடம் கேட்டறிந்தார். 

இதையும் படிங்க: "VINTAGE" பொருட்களை கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின்..! பழமையான கார்களுடன் புகைப்படம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share