×
 

எதிர்க்கட்சியாக செயல்படுவோம்..! நீங்க இருக்க வரைக்கும் எனக்கென்ன கவலை..! மனம் திறந்த ஸ்டாலின்..!

நீங்கள் இருக்கும் வரை எனக்கு என்ன கவலை என முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வந்த திமுக இந்த தேர்தலில் தோல்வியை தழுவியது. எதிர்க்கட்சியாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பான தனது கருத்துக்கள் பகிர்ந்துள்ளார். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்., இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க: #TNElectionResults2026: 14வது சுற்றிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு... அதுவும் இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசமா?

நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை எப்போதும் செய்து வருகிறோம் என்றும் அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திமுக பார்க்காத வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை என்று கூறியுள்ள ஸ்டாலின், எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் என்றும் நீங்கள் இருக்கும் வரை எனக்கு என்ன கவலை எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share