"FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!
முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் சென்றுள்ளதால் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமான பிரசாரக் களைப்பைப் போக்கிக் கொள்ள குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றுள்ளார். தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத சூழலில், அவர் ஓய்வெடுப்பதற்காக மேற்கொண்ட இந்தக் குடும்பப் பயணம், அவரது அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து வரும் ஒரு பழக்கமாகவும் அமைந்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், கடந்த சில வாரங்களாக ஓய்வின்றி உழைத்து வந்தார். பொதுக்கூட்டங்கள், தொண்டர்களுடனான சந்திப்புகள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டல் என அவரது அட்டவணை மிகவும் பரபரப்பாக இருந்தது.
இந்தக் களைப்பைப் போக்கவும், குடும்பத்துடன் சில நாட்கள் அமைதியான சூழலில் செலவிடவும் கொடைக்கானலைத் தேர்வு செய்துள்ளார். இது 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பிறகு அவர் மேற்கொண்ட அதே வகையான ஓய்வுப் பயணத்தை நினைவூட்டுகிறது. அந்தத் தேர்தல்களுக்குப் பிறகு கொடைக்கானல் சென்ற அவருக்கு அந்த இடம் அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு சூப்பரா இருக்கு..! மதுரை ஏர்போர்ட்டில் முதல்வர் ஸ்டாலின் பளிச் பதில்..!
ஏப்ரல் 25ஆம் தேதி சனிக்கிழமை (இன்று) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்குச் சென்ற முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு பயணித்தார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உடன் சென்றனர். முதலமைச்சர் கொடைக்கானலுக்கு பயணம் சென்றுள்ளதால் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: நிலவரம் எப்படி இருக்கு..? திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!