×
 

சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி… துருப்பிடித்த திமுக… நயினார் ஆவேசம்…!

திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளால் தொடர்ந்து சர்ச்சையின் நடுவில் திகழ்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சி, குற்றமில்லா தமிழகம் என்று தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தாலும், கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களின் அதிகரிப்பு, எதிர்க்கட்சிகளின் மிகுந்த விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள், திமுக அரசை குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 4 கொலைகளும், 4 போதைப் பொருள் கடத்தல்களும், 4 பாலியல் குற்றங்களும் 1 கொலை முயற்சியும், காவல்துறை மீதான தாக்குதல் ஒன்றும் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இது போதாததற்கு, சென்னையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கொலை முயற்சி நடந்தது, போதையில் இருவர் காவலரையே தாக்கியது ஆகியவை திமுக ஆட்சியில் தலைநகரிலேயே ஏட்டளவுக்குக்கூட சட்டம் ஒழுங்கு இல்லை என்பதை அம்பலப்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.

ஒரு காலத்தில் முதல்வர் ஸ்டாலினால் போலியாக பெருமை பேசப்பட்ட இரும்புக்கரம் நான்கரை ஆண்டுகளாக ஒரு போதும் செயல்படாமல் இத்துப்போய் தற்போது ஒட்டுமொத்தமாக துருப்பிடித்துப் போய்விட்டது என்பதற்கு நேற்று ஒரு நாளில் நடந்த குற்றங்களே சாட்சி என்றும் 

இதையும் படிங்க: அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்... வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு செம்ம ட்ரீட்...!

துருப்பிடித்த இரும்பைக் காயலான் கடைக்குத் தூக்கிப் போடுவது போல, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை மக்களும் கண்காணா தொலைவில் தூக்கி எறியத் தான் போகிறார்கள் என்றும் கூறினார். சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுத்து, தமிழகத்தைத் தலை நிமிரச் செய்யப் போகிறார்கள்., இது உறுதி என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு? ஆட்டம் காணுமா திமுக கூட்டணி... விசிக ரவிக்குமார் பரபரப்பு பேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share