×
 

அவசரப்பட்டு போகாதீங்க..! கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

தற்போது அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை சந்தித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்டாத நிலையில், ஆட்சியமைக்க கூடுதல் ஆதரவு தேவைப்பட்டது.

இந்தச் சூழலில் தவெக சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோருக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தொங்கு சட்டசபை நிலை உருவானது. தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனிடையே, பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், மதச்சார்பற்ற கட்சிகளிடம் ஆதரவு தேடும் நடவடிக்கையை தவெக மேற்கொண்டது. கலந்து ஆலோசித்து விஜய்க்கு ஆதரவு தருவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினர். இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்தனர். திருமாவளவன், வீரபாண்டியன், சண்முகம் உள்ளிட்டோர் திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிங்க: திமுகவில் அதிரடி முடிவு! வாரிசு அரசியல் பேச்சுக்கு முற்றுப்புள்ளி! நேரு கையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி?!

அப்போது, விஜய் ஆதரவு கூறி வரும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி கட்சியை தலைவர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியனிடம் ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. தற்போது அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பல தேர்தல்களை நாம் ஒன்றிணைந்து சந்திப்போம் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படிங்க: 180 சீட்டு ஜெயிச்சிருக்கணும்! தோத்ததே இவரால தான்! செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share