×
 

"என்னைக்குமே திமுக பதவிக்கு ஆசைப்பட்டதில்ல"... திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி..!!

திமுகவினர் என்றும் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும், எதிர்பாராத வகையில் பெரும் தோல்வியை சந்தித்தது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி ஒற்றைப் பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைவாக இருந்தாலும், ஒற்றைப் பெரிய கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. 59 இடங்களுக்கு குறைந்தது, அதிமுக 47 இடங்களைப் பெற்று, முதல் முறையாக தொங்கு சட்டமன்றம் உருவானது. 

இந்தத் தோல்வி தி.மு.க.வுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 2021 தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, பல்வேறு திட்டங்கள் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தியிருந்தாலும், மக்கள் ஆதரவு கணிசமாகக் குறைந்தது. ஸ்டாலின் தானே தனது தொகுதியான கொளத்தூரில் தோல்வியைத் தழுவினார். இதைத் தொடர்ந்து, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக உள்ளிட்ட கட்சியினர் பல்வேறு அரசியல் கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பவள விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் திமுகவில் இணைய வந்து இருக்கிறீர்கள் என்று தெரிவித்தார். வழக்கமாக ஆளுங்கட்சியை நோக்கி தான் மாற்றுக் கட்சியினர் செல்வார்கள் என்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவை நோக்கி வந்துள்ளீர்கள் எனில் நீங்கள் பதவிக்காக வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இது நியாயமா? பட்டு திருந்துங்க...! கொளத்தூர் மக்களை சபித்த நடிகர் சத்யராஜ்..!

தொண்டனாக இருந்தாலும் தலைவனாக இருந்தாலும் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆட்சி பறிபோகும் என தெரிந்தே அவசர நிலையை திமுக எதிர்த்ததாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ஆட்சி நமக்கு முக்கியமில்லை என்றும் ஜனநாயகமே முக்கியம் என நினைத்தவர் கலைஞர் கருணாநிதி புகழாரம் சூட்டினார். வெற்றிக்காக திமுகவினர் என்றும் அலைந்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: ராஜா ராஜாதான்... ராஜாங்கம் தொடரட்டும்... திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share