×
 

கொளத்தூர் தொகுதி என் செல்லக் குழந்தை..! மீண்டும் இதே தொகுதிக்கு வருவேன்.! சத்தியம் செய்த முதல்வர் ஸ்டாலின்..!

கொளத்தூர் தொகுதி எனது செல்லக் குழந்தை என முதல்வர் ஸ்டாலின் தனது இறுதி கட்ட பரப்புரையில் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்காக நடந்த பிரச்சாரங்கள் இன்றுடன் ஓய்கிறது. கொளத்தூர் தொகுதியில் இறுதி கட்ட பிரச்சாரம் நடத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வதால் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் இறுதி கட்ட பிரச்சாரத்தை நடத்தினார். வழி நெடுகிலும் காத்திருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து பொதுக்கூட்ட மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விடுபட்ட மகளிரையும் இணைத்து உரிமைத்தொகை 2000 ரூபாயாக வழங்கப்படும் என்று உறுதியளித்தார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இல்லத்தரசிகள் திட்டத்திற்கு தான் தனது முதல் கையெழுத்து எனவும் தெரிவித்தார்.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இதே தொகுதியில் நின்று ஓட்டு கேட்க வருவேன் என்றும் இது சத்தியம் சத்தியம் எனவும் தெரிவித்தார். அடிமட்டத்தில் இருந்து உழைத்து அடிபட்டு சிறை சென்று தான் இந்த இடத்திற்கு வந்திருப்பதாகவும் அந்த தழும்பு கூட உடலில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 60 ஆண்டுகால போராட்ட வாழ்வின் மூலம் தான் முதல்வர் பொறுப்பிற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின்..! இறுதி கட்ட பரப்புரை தீவிரம்..!

ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் நான் முதல்வராக இருந்தாலும் கொளத்தூர் தொகுதி எனது செல்லக் குழந்தை என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறியவர்கள் இன்று ரெய்டுக்கு பயந்து கூட்டணி வைத்திருப்பதாக விமர்சனம் செய்தார். மாப்பிள்ளை இவர்தான் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்பதை போல கூட்டணிக்கு ஈபிஎஸ் தான் தலைவர் ஆனால் அவர் தலைவர் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி..! வில்லிவாக்கம் பரப்புரையில் முதல்வர் சூளுரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share