சிலிண்டர் தட்டுப்பாடு..! பதறாதீங்க... பொது மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்..!!
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் GAS சிலிண்டர் தட்டுப்பாடு என்ற பிரச்சினை மீண்டும் தலைதூக்கியது. இது உலக அளவிலான புவிசார் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய தாக்கம். முக்கிய காரணம் மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதை தடைபட்டது. வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வணிக உபயோக சிலிண்டர்களின் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனால் பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமர் மோடிக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சக்கரபாணி தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது என்று தெரிவித்தார். இவ்விவகாரத்தில் மத்திய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 3 பாலியல் குற்றங்கள்... ஈரக்குலை நடுங்குது..! கொதித்துப் போன நயினார்..!!
போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: தூக்குல போடுங்க... பெண் பிள்ளைகளை சீரழிக்கும் அவலம்... சீமான் ஆவேசம்..!!