RESULT முடிவல்ல.. பிள்ளைகளுக்கு நண்பனாக இருங்கள்..! முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!
தேர்வு முடிவுகள் எதுவானாலும் அது முடிவல்ல என்ற முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு பொது தேர்வில் 93.16% மாணவர்களும், 96.70 % மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் ரிசல்ட் எதுவாக இருந்தாலும் அது முடிவல்ல என்று மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். இதனை மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும் என்று கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது என கூறினார்.
இதையும் படிங்க: வெளியானது +2 பொதுத்தேர்வு முடிவுகள்..! 95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தல்..!
இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே., இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள் என்று கூறியுள்ளார். பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: வெளியானது +2 பொதுத்தேர்வு முடிவுகள்..! 95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தல்..!